பாலினையும் இறக்குமதி செய்யாதிருக்க ஏற்பாடு செய்யுங்கள் - பண்ணையாளர்கள் கோரிக்கை
வெளிநாடுகளில் இருந்து முட்டை இறக்குமதி செய்யப்பட்டதை போன்று பாலையும் இறக்குமதி செய்யாதிருக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கால்நடை பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்திருப்பதாக கிளிநொச்சி கரைச்சி வடக்கு கால்நடை கூட்டுறவாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் பண்ணையாளர்கள் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பிலேயே இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
கால்நடை பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக உரிய தீர்வினை பெற்று தர வேண்டுமென கால்நடை பண்ணையாளர்களினால் இந்த ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பண்ணையாளர்கள் பாதிப்பு
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்பொழுது ஏற்பட்டுள்ள கடும் வறட்சி நிலை காரணமாக கிளிநொச்சி கால்நடை பண்ணையாளர்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தற்பொழுது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியான காலநிலை காரணமாக நீர்நிலைகள் முற்றும் முழுதாக வற்றிய நிலையில் காணப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |