அருவியில் குளிக்க சென்ற இராணுவ அதிகாரி பலி
இரத்தினபுரி குருவிட்ட பொலிஸ் பிரிவில் வலந்துர கெரடி நீரருவியில் நீராடச் சென்ற நிலையில், காணாமல் போன இராணுவ கெப்டனில் சடலம் நேற்று நீரருவிக்கு கீழே உள்ள ஆற்றில் காணப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குருவிட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகள், குருவிட்ட இராணுவ முகாம் அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குருவிட்ட கெமுனு ஹேவா படைப்பிரிவில் பணியாற்றி வந்த மில்லவிய பகுதியை வசிப்பிடமாக கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான கெப்டன் சுரன் ரணசிங்க என்ற 32 வயதான அதிகாரியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் மேலும் மூன்று பேருடன் இணைந்து கடந்த 5 ஆம் திகதி நீரருவியில் குளிக்க சென்றுள்ளார். இவர்களில் இரண்டு பேர் குளித்து விட்டு கரைக்கு திரும்பிச் சென்றுள்ளன். இரண்டு பேர் தொடர்ந்தும் அருவியில் குளித்துள்ளனர்.
திடீரென புரண்டு வந்த தண்ணீரில் இராணுவ அதிகாரி அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன் மற்றைய நபர், மரக் கிளை ஒன்றை பற்றிப்பிடித்து உயிர் தப்பியுள்ளார்.
இதனையடுத்து நீரில் அடித்துச் செல்லப்பட்ட அதிகாரியை தேடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் அவர் சடலமாக நேற்று மாலை மீட்கப்பட்டதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
