உடனடியாக இந்தியா செல்லும் இராணுவ தளபதி
பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியும் இலங்கை இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா(General Shavendra Silva)இந்தியாவுக்குச் சென்றுள்ளார்.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்தியாவின் முதல் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் இராணுவ இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா இந்தியாவிற்குச் சென்றுள்ளார்.
புதுடெல்லியில் இன்று மாலை நடைபெறும் இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத்தின் இறுதிச் சடங்கில் கலந்துக்கொள்வதற்காவே தனது மனைவி மற்றும் இராணுவ அதிகாரிகள் உட்பட 11 பேருடன் இன்று (வெள்ளிக்கிழமை) ஜெனரல் சவேந்திர சில்வா அதிகாலை புதுடெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்கள்.
இந்தியாவின் முதலாவது முப்படை தளபதியாக பிபின் ராவத்தின் இறுதிச் சடங்கானது முழுமையான இராணுவ மரியாதையுடன் நடத்தப்படவுள்ளது. இந்திய முப்படை தளபதியின் இறுதி ஊர்வலம் புதுடெல்லி காமராஜ் வீதியில் ஆரம்பமாகி, டெல்லி இராணுவ கண்டோன்மன்ட் பகுதிக்கு சென்றடையுள்ளதுடன் Brar Square பகுதியில் தகன கிரியை நடைபெறவுள்ளது.



