பொது சுகாதார அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள இராணுவத்தளபதி
கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் பொது சுகாதார அதிகாரிகள் மேற்கொள்ளும் செயற்பாடுகள் தொடர்பில் இராணுவத்தளபதி தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
கோவிட் தடுப்பு தேசிய செயலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். களத்தில் பணிகளை செய்யும் போது ஏற்படுகின்ற பாரிய பிரச்சனைகளுக்கு மத்தியில் பொது சுகாதார அதிகாரிகளின் பணிகள் போற்றத்தக்கவை.
இந்தநிலையில் ஊடகங்களுக்கு கருத்துக்களை வழங்கும் அவை பிழையான வகையில் கொண்டு செல்லப்படுகின்றன. இது ஒட்டுமொத்த பொது சுகாதார அதிகாரிகளையும் பாதிப்பதாக சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களில் 900 என்ற எண்ணிக்கைக்கு உயர்ந்திருந்த கோவிட் பாதிப்பு,தற்போது 500 என்ற அளவுக்கு குறைந்துள்ளதாக சவேந்திர சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.




