பாதாள உலக குழு உறுப்பினர்களுக்கு ஆயுதங்கள் விற்பனை - முன்னாள் விமானப்படை அதிகாரி தகவல்
இராணுவம், பாதாள உலக குழு உறுப்பினர்களுக்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளதாக முன்னாள் விமானப்படை அதிகாரி ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் மின்னேரிய இராணுவ முகாமில் இருந்து 133 T-56 துப்பாக்கிகள் திருடப்பட்டு பாதாள உலக உறுப்பினர்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாக முன்னாள் விமானப்படை அதிகாரியும் ஊடகவியலாளருமான கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இணைய ஊகடம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாடளாவிய ரீதியில் இடம்பெறும் பல குற்றச்செயல்களில் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் உரிய துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் பொது பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி மற்றும் பல ஊடகவியலாளர்களின் பெயர்களை இணைத்து அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளமை விசேட அம்சமாகும்.

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை Cineulagam
