அரியாலை கழிவு முகாமைத்துவ நிலையம் தொடர்பாக நல்லூர் தவிசாளர் வெளியிட்ட அறிக்கை

Jaffna Northern Province of Sri Lanka
By Kajinthan Oct 11, 2025 12:09 AM GMT
Report

அரியாலை காரைமுனங்கு கழிவு முகாமைத்துவ நிலையம் தொடர்பாக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தற்போது ஊடங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் சமூக மட்டத்திலும் ஒரு பேசுபொருளாக அரியாலை காரைமுனங்கு கழிவுமுகாமைத்துவ மையமும் அதில் சேகரிக்கப்படும் குப்பைகளும் மாறியுள்ளது.

முதன்முறையாக புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்பிய பிரித்தானியா

முதன்முறையாக புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்பிய பிரித்தானியா

கழிவகற்றல் முகாமைத்துவ நிலையம்

குறித்த விடயம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது சொந்த மனஎண்ணங்களையும் சிந்தனைகளையும் பொதுக்கருத்துக்களாக சமூக வெளியில் தெரிவித்து எதிர்மறையான கருத்துருவாக்கங்களை உருவாக்கி ஒரு குழப்ப நிலையை ஏற்படுத்தியுள்ளனர். 

அரியாலை கழிவு முகாமைத்துவ நிலையம் தொடர்பாக நல்லூர் தவிசாளர் வெளியிட்ட அறிக்கை | Ariyalai Karaimunang Waste Management Center

குறித்த விடயம் தொடர்பிலான உண்மையான நிலைப்பாட்டினை மக்கள் மத்தியில் தெரிவிக்க வேண்டிய கடப்பாடு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்களின் சபை என்ற அடிப்படையில் எமக்குண்டு என்பதனால் இவ் ஊடக அறிக்கை வெளியிடப்படுகின்றது.

அரியாலை பிரதேச வாழ் மக்களால் குறித்த கழிவு முகாமைத்துவ நிலையம் அமைப்பதற்கு எதிராக நடாத்தப்படும் அமைதிப் போராட்டங்களுக்கு நல்லூர் பிரதேச சபை மதிப்பளிக்கின்ற அதேவேளை மக்களின் மத்தியில் தவறாக சித்தரிக்கப்பட்ட விடயங்களை மக்களுக்கு தெளிவாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் பிரதேச சபைக்குண்டு.

உள்ளுராட்சி மன்றங்களின் மிகப் பிரதான செயற்பாடு கழிவுகற்றல் முகாமைத்துவமாகும். அவ் கழிவு முகாமைத்துவத்தில் ஏனைய உள்ளுராட்சி மன்றங்களுக்கு முன்னுதாராணமாக செயற்பட வேண்மென்றும் மக்களின் சுகாதாரத்தினைப் பேணவும் பிரதேசத்தினை தூய்மையாக வைத்திருக்கவும் நல்லூர் பிரதேச சபை தன்னுடைய கழிவகற்றல் முகாமைத்துவத்தினை இன்றுவரை சிறப்பாக செய்து வருகின்றது.

குறித்த கழிவகற்றல் செயற்பாட்டின் வினைத்திறனை அதிகரிக்கும் வகையில் மற்றொரு மைல்கல்லாக இவ் கழிவகற்றல் முகாமைத்துவ நிலையத்தினை அமைப்பதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டது.

தப்பி ஓடிய அசாத் மௌலானாவை பின் தொடர்ந்த பிள்ளையான் - சுரோஸ் சாலே! வெளியான திடுக்கிடும் தகவல்

தப்பி ஓடிய அசாத் மௌலானாவை பின் தொடர்ந்த பிள்ளையான் - சுரோஸ் சாலே! வெளியான திடுக்கிடும் தகவல்

கழிவுசேகரிக்கும் குப்பைமேடாக 

குறித்த செயற்பாடுகளின் முதற்கட்டமாக பொருத்தமான ஒரு இடம் எமது பிரதேச சபையின் நியாயதிக்கத்தினுள் தெரிவு செய்து தருமாறு கோரப்பட்டதற்கு அமைவாக நல்லூர் பிரதேச செயலகத்தினால் முறையாக குறித்த திட்டத்திற்கு காணி ஒதுக்கப்பட்டது.

குறித்த காணியில் குறித்த கழிவு முகாமைத்தவ செயற்பாடுகளினால் ஏதாவது சூழல் மாசடையும் நிலை ஏற்படுமா என்பதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக குறித்த செயற்றிட்டம் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபையுடன் பிரஸ்தாபிக்கப்பட்டு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுமதியும் பெறப்பட்டு அதன் பின்னரே பூர்வாங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

அரியாலை கழிவு முகாமைத்துவ நிலையம் தொடர்பாக நல்லூர் தவிசாளர் வெளியிட்ட அறிக்கை | Ariyalai Karaimunang Waste Management Center

குறித்த கழிவ முகாமைத்துவ நிலையம் என்பது ஒரு கழிவுசேகரிக்கும் குப்பைமேடாக உருவாக்கப்பட கூடாது என்ற தூரநோக்கு சிந்தனையினை அடிப்படையாகக் கொண்டே இச் செயற்றிட்டம் பிரதேச சபையினால் ஆரம்பிக்கப்பட்டது.

இங்கு இடம் பெறும் செயல்முறையானது பிரதேச வாழ் மக்களிடம் சேகரிக்கப்படும் கழிவுகளில் உக்கக்கூடிய மற்றும் உணவுப்பொருட்கள் சார்ந்த கழிவுகளைத் தவிர்த்து சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்ரிக் பொலித்தீன் போன்ற உக்காத கழிவுகளைச் சேகரித்து அவற்றினைத் தரம்பிரித்து மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கொள்கைகளுக்கு அமைவாக உரிய பொறிமுறைகள் வாயிலாக குறித்த கழிவு முகாமைத்துவ நிலையதிலிருந்து நாளாந்தம் அகற்றுவதே இங்கு இடம்பெறப்போகின்ற பொறிமுறையாகும்.

இக் கழிவுமுகாமைத்துவ நிலையத்தில் எந்த ஒரு காலப்பகுதியிலும் பெறப்படுகின்ற கழிவுப்பொருட்கள் தொடர்ச்சியாக சேமித்து வைப்பட மாட்டாது.

குறித்த விடயம் மக்கள் மத்தியில் சரியாக சென்றடையுமானால் எந்தவொரு போராட்டத்தினையும் மக்கள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படாது.

நல்லூர் பிரதேச சபை காரைமுனங்கு கழிவுமுகாமைத்துவ மையத்தினை குப்பைகளைக் கொட்டி அதனை குப்பை மோடாக மாற்றுகின்ற செயற்பாட்டினை ஒருபோதும் செய்யவுமில்லை செய்யப்போவதுமில்லை. 

இது தொடர்பாக ஏதாவது சந்தேகங்கள் இருப்பின்

மேலும் மக்களின் தெளிவுபடுத்தலுக்காக குறித்த இத்திட்டத்தின் இரண்டாம்கட்ட நடவடிக்கையாக இவ் கழிவு முகாமைத்துவ நிலையத்தில் சேகரிக்கப்படும் அனைத்து பிளாஸ்ரிக், பொலித்தீன் , கண்ணாடி, கழிவுகள் ஒரு இவ்வாறன கழிவுகளை பாரியளவில் மீள்சுழற்சி செய்கின்ற நிறுவனத்திற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கான ஏற்பாடுகளும் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றது.

அரியாலை கழிவு முகாமைத்துவ நிலையம் தொடர்பாக நல்லூர் தவிசாளர் வெளியிட்ட அறிக்கை | Ariyalai Karaimunang Waste Management Center

குறித்த இச் செயற்றிட்டத்தின் மூன்றாவது கட்டடமாக மேலைத்தேசய நாடுகளில் இவ்வாறான கழிவுப்பொருட்களினை பாரியளவில் மீள்சுழற்சி செய்வதற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களைப் போன்ற உரிய அமைச்சுக்களின் ஊடாக கொள்வனவு செய்து இந் நிலையத்தில் பொருத்தி ஒரு நவீன கழிவுமுகாமைத்துவ மையமாக இதனை உருவாக்குவதற்குரிய பணிகளும் தற்போது எம்மால் முன்னடுக்கப்பட தொடங்கியுள்ளது. 

மேலும் இக் கழிவுமுகாமைத்துவ நிலையத்தில் முதற்கட்டமாக 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் குறித்த அரியாலை பிரதேசத்திலிருந்தே உள்வாங்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து இயந்திர சாதனங்கள் பொருத்தப்பட பொருத்தப்பட அப்பகுதியிலிருந்து இன்னும் பல இப் பிரதேச மக்களுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படுவதற்கான பிரேரணையும் இச் செயற்றிட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் அப்பிரதேச கழிவுமுகாமைத்துவ நிலையத்தில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களை வேலைக்கு உள்வாங்கும் போது சூழல்பாதுகாப்பு என்ற விடயத்தில் முனைப்பாக இருக்கும் மக்கள் குறித்த செயற்றிட்டத்தினை சிறப்பாக செயற்படுத்தி அப்பிரதேசத்தினை தூயபிரதேசமாக வைத்திருப்பாளர்கள் என்ற தொலைநோக்குப் பார்வையினாலேயே ஆகும்.

மேலும், கழிவகற்றல் நிலையம் தொடர்பாக ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் எதுவித தயாக்கமும் மின்றி நேரடியாக பிரதேச சபையினை அணுக்கி தெளிபடுத்தல்களினை பெற்றுக் கொள்ள முடியும் என இத்தால் தெரித்துக் கொள்கின்றோம்  என குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவை உலுக்கிய பாரிய வெடிப்பு.. பலர் பலி!

அமெரிக்காவை உலுக்கிய பாரிய வெடிப்பு.. பலர் பலி!

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US