அனுமதி பத்திரத்துடன் அகழப்பட்ட மணலால் பாதிப்படைந்துள்ள பகுதி
யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு கட்டைக் காட்டில் அனுமதிப்பத்திரத்துடன் அண்மைக்காலமாக அகழப்பட்ட மணலால் குறித்த பகுதி பாதிக்கப்பட்டுள்ளது.
மணல் அகழப்பட்ட பகுதியைச் சுற்றி மக்கள் குடியிருப்பதால் பாரிய குழியில் தற்போது நீர் தேங்கி காணப்படுகிறது.
இதனை தடுக்கும் நோக்கிலையே கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகத்தால் குறித்த எல்லைக்குள் மண் அள்ளுவதற்கு தடை விதிக்கப்பட்டு ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
மக்கள் பாதிப்பு
பிரதேச செயலகத்திற்கும் எழுத்து மூலம் மண் அள்ளுவதற்கான அனுமதி பத்திரத்தை நிறுத்துமாறு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
குறித்த இடத்தில் அதிகமாக மணல் அள்ளப்பட்டதை பிரதேச செயலகமும் உறுதி செய்து மணல் விநியோகத்திற்கான அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்தது.

இந்நிலையில் கடந்த வருடங்களில் தொடர்ச்சியாக குறித்த பகுதியில் மணல் அள்ளப்பட்டு வந்ததன் விளைவாக தற்போது குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.
இதனால் வெள்ள நீர் தேங்கி காணப்படுவதால் அருகில் வசிக்கும் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.