கொழும்பில் சர்ச்சையை ஏற்படுத்திய பிக்குவின் படம்! யுவதி தொடர்பில் வெளியான உண்மை
கொழும்பில் அண்மையில் இளம் பிக்கு ஒருவரும் யுவதி ஒருவரும் வீதியில் நிற்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டு தேரருக்கும் அந்த யுவதிக்கும் இடையில் காதல் தொடர்புகள் உள்ளதென பலரும் தெரிவித்தனர்.
பிக்கு தொடர்பில் சர்ச்சை

தேரர் ஒருவர் காதல் வயப்பட்டமைக்கு கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுடன், பலரும் அவர்களை தவறான முறையில் விமர்ச்சித்திருந்தனர்.
இதுவொரு சமூக பிரச்சினையாக மாறியமையால் பொலிஸார் தலையிட்டு விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த புகைப்படத்தில் இருப்பவர்கள் ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரன் சகோதரி என தெரியவந்துள்ளது. குறித்த இருவரின் தாயார் புற்றுநோய் காரணமாக மகரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சமூக வலைத்தளங்களின் செயல்

தாயை பார்ப்பதற்காக அதிகாலை வீதிக்கு வந்த போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தவறாக சித்தரிக்கும் அளவிற்கு சமூக வலைத்தளங்கள் மோசமாகியுள்ளதென சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri
யார் இந்த கிரிஜா? பிரபல நடிகருடன் நெருக்கமான காட்சிகள், திடீர் ட்ரெண்டிங், முழு விவரம்... Cineulagam
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri