அர்ச்சுனா எம்.பியின் மோசமான செயல்: பொலிஸார் சட்ட நடவடிக்கை!
நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு (Ramanathan Archchuna)எதிராக சட்டம் நடைமுறைபடுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது, இராமநாதன் அர்ச்சுனாவுக்குஎந்த சிறப்பு சலுகைகளையோ அல்லது சட்டத்திலிருந்து விலக்குகளையோ வழங்காது.
வெளியான காணொளி
அவர் மிக உயர்ந்த சபையின் நபர், அவரது நடத்தை மிகவும் மரியாதைக்குரியதாக இருக்க வேண்டும். பொதுமக்கள் எதிர்பார்ப்பது அதைத்தான்.
பொலிஸார் தாங்கள் நடந்து கொள்ளும் விதத்தில் எவ்வளவு மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்களோ அவ்வாறே பொதுமக்களும் நடந்து கொள்ள வேண்டும். எனவே அந்தவகையில் செயல்படுவது அவரது கடமை.
இருப்பினும், அவர் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டால், நாங்கள் சட்டத்தின்படி செயல்படுவோம்.
எதிர்காலத்தில் நாம் பார்ப்பது போல, அந்த சம்பவம் தொடர்பாக இலங்கை பொலிஸார் தற்போதுள்ள சட்டத்தின்படி செயல்படுவார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
யாழில் (Jaffna) நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பொதுமகன்கள் இருவரை தாக்கும் வகையிலான சிசிடிவி காணொளி ஒன்று வெளியாகியிருந்தது.
முறுகல் நிலை
முன்னர், இராமநாதன் அர்ச்சுனாவின் தாக்குதலுக்கு உள்ளாகிய நபர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், யாழில் நேற்று முன்தினம் இரவு, தனியார் விருந்தினர் விடுதி ஒன்றுக்குள் வைத்து அர்ச்சுனா எம்.பி காணொளி எடுக்க முற்பட்ட போது, அங்கு நின்ற நபருக்கும் அவருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர், குறித்த நபரை விடுதிக்குள் வைத்து துரத்தி துரத்தி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காணொளி நேற்று வெளியாகியிருந்தது.
எனினும், குறித்த நபர் தன்னைத் தாக்கியதாக தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த விடயம் குறித்து பொலிஸார், அர்ச்சுனாவின் சட்டத்திற்கு முரணான செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மகாராஜாவை விட அதிக விலைக்கு விற்பனை ஆன விஜய் சேதுபதியின் புதிய படம்.. மகிழ்ச்சியில் தயாரிப்பாளர் Cineulagam

டான்ஸ் ஜோடி டான்ஸ் 3 ரீலோடட் போட்டியாளருக்கு விருந்து வைத்த சரத்குமார், சர்ப்ரைஸ் போன் கால்.. இந்த வாரம் நடக்கும் விஷயங்கள் Cineulagam

Serial update: குணசேகரனுக்கு எதிராக சதிச் செய்யும் கதிர்- வசமாக சிக்கிய மகன்.. அதிகாரியின் அதிரடி Manithan
