பொலன்னறுவையில் இராவனேஸ்வரன் அறநெறிப் பாடசாலை ஆரம்பித்து வைப்பு
பொலன்னறுவையில் இராவனேஸ்வரன் அறநெறிப் பாடசாலை ஆரம்பித்து
வைக்கப்பட்டுள்ளதுடன், 70 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி
வைக்கப்பட்டுள்ளன.
சைவ சமயத்தின் வரலாற்று தொன்மை கொண்ட பொலன்னறுவை மாவட்டத்தின் கல்லேல்ல சுவசெதஹம கிராமத்தில் குறித்த அறநெறி பாடசாலை நேற்று (09.06.2024) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கற்றல் உபகாரணங்கள்
இந்நிகழ்வில், சுவாமி தேவானந்த ஆனந்த தத்துவ ஞான சபை ஆச்சாரியர், பொள்ளாச்சி கோவை ஒருங்கிணைப்பாளர் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் சிவன் மானுட மேம்பாட்டு நிறுவனத்தின் குருஜி இ. கலியுக வரதன் மற்றும் இந்து சமய செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் அறநெறி கல்வியை தொடரும் எழுபது மாணவர்களுக்கான கற்றல் உபகாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |