ஹவுதிகளை தாக்க உதவிய அரபு நாடுகள்! அமெரிக்கா முக்கிய நகர்வு
ஹவுதிகளின் படை தளங்களை குறிவைத்து தாக்கிய அமெரிக்காவின் திட்டத்துக்கு இரு அரபு நாடுகள் ஆதரவளித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஏமன் தலைநகர் ஸனா மற்றும் வடக்கு சாடா பிராந்தியத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
படை தளங்களின் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டதாகவும், இந்த தாக்குதலில் 31 ஹவுதிகள் உயிரிழந்திருந்தனர்.
இதில் 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
சவுதிஅரேபியா
எனினும், அமெரிக்காவுக்கு உரிய முறையில் பதிலடி கொடுப்போம் என ஹவுதிகள் அறிவித்துள்ளன.
இந்நிலையில் ஹவுதிகள் மீதான தாக்குதலுக்கு சவுதி அரேபியா உதவி செய்ததாக சில செய்திகள் வெளியாகி உள்ளன.
ஆனால் இந்த தகவலை சவுதிஅரேபியா அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். ஹவுதிகள் மீதான தாக்குதலுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சவுதி அரேபியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பின்னணியில் அமெரிக்காவுக்கு வேறு 2 அரபு நாடுகள் உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹவுதிகள் மீதான தாக்குதல்
அந்த நாடுகளின் பெயர்கள் கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ். இந்த 2 நாடுகளும் ஹவுதிகள் மீதான தாக்குதலுக்கு அமெரிக்காவின் போர் விமானங்களுக்கான எரிபொருளை வழங்கியதாக கூறப்படுகிறது.
ஹவுதி சார்பில், ‛‛அமெரிக்காவும், பிரிட்டனும் சேர்ந்து எங்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.
பிரிட்டன் நேரடியாக தாக்குதலில் ஈடுபடவில்லை. இருப்பினும் அமெரிக்காவுக்கு பிரிட்டன் உதவி உள்ளது'' என்று கூறி உள்ளது.
இதனால் அமெரிக்கா இந்த தாக்குதலை நடத்தினால் கூட அதற்கு சில நாடுகள் உதவி உள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
