கட்சிகளை பிளவுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை: மாவை அதிரடி அறிவிப்பு (Video)

Jaffna Mavai Senathirajah Sri Lanka
By Theepan Feb 02, 2023 11:53 PM GMT
Report

கட்சிகளை பிளவுபடுத்தக்கூடியவாறு செயல்பட்டவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இன்று (02.02.2023)   நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கொண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவித்துள்ளதாவது,


கட்சிகளை பிளவுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை: மாவை அதிரடி அறிவிப்பு (Video) | Appropriate Action

புதிய அணுகுமுறை

''இலங்கை தமிழரசு கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு அங்கத்துவ கட்சியாக இருந்துகொண்டு எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் ஒரு புதிய அணுகுமுறையை சிபாரிசு செய்திருக்கின்றார்கள். அதாவது, இந்த தேர்தல் வட்டார அடிப்படையிலும் விகிதாசார அடிப்படையிலும் பிரதிநிதிகளை தெரிவு செய்கின்ற அந்த முறையின் ஒரு புதிய அணுகல் முறையை நாங்கள் பரீட்சித்து பார்க்க வேண்டும்.

அதில் வெற்றி பெற வேண்டும் என்று எங்களுடைய தேசிய கட்சிகயில் ஒன்றாக இருந்த தமிழ் தேசிய கட்சியினிடத்திலே வேண்டுகோள் விடுத்திருந்தன. இலங்கை தமிழரசுகட்சியினுடைய மத்திய குழு அந்த சிபாரிசை செய்திருந்தது.

அந்த சிபாரிசின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலே அங்கம் வகிக்கின்ற கட்சிகள் ஒவ்வொருவரும் தனித்தனியாக உள்ளூராட்சி சபை தேர்தலிலே பங்குபற்றுவதன் மூலம் வட்டார அடிப்படையிலே வருகின்ற கட்சிகளும் அதைவிட விகிதாசார அடிப்படையில் ஏனைய தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அப்பால் சுயேட்வைகளும் ஏனைய கட்சிகளும் பெறுகின்ற எஞ்சிய வாக்குகளால் வருகின்ற அந்த பிரதிநிதித்துவத்தையும் நாங்கள் எல்லோரும் ஒன்றாகப் பெறலாம்.

எல்லாரும் ஒன்றாக பெற்று எங்களுடைய வடகிழக்கில், உள்ளூராட்சி மனற பிரதேச சபைளில் என்றாலும் ஒரு பெரும்பான்மையினை நாங்கள் பெற்று ஆட்சி அமைக்கலாம் என்று ஒரு புதிய அணுகுமுறையில் தேர்தலில் ஈடுபடுவோம் என்று கலந்து பேசினோம். அந்தத் தீர்மானத்தை இறுதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பிலே அங்கம் வைக்கின்ற கட்சிகள் அதில் அதிகம் விருப்பம் இல்லாமல் இருந்தார்கள்.

கட்சிகளை பிளவுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை: மாவை அதிரடி அறிவிப்பு (Video) | Appropriate Action

இனத்துக்காக ஒன்றுபட்டு உழைப்போம்...

தமிழரசு கட்சி தனது செயற் குழுவிலே அதை சிபாரிசு செய்தது. கடந்த 10 ஆம் திகதி ஜகாதிபதியை சந்தித்த நேரத்தில் அதற்கு முதல்நாள் 9 ஆம் திகதி நாங்கள் ஒவ்வொருவருக்கொருவர் முரண்பாடுகளை தவிர்த்துக் கொண்டு தேர்தலில் வடகிழக்கில் ஒன்றுபட்டு நாங்கள் ஆட்சியினை அமைப்போம் என கூறினோம்.

அந்த காரணங்களுக்காக எங்கள் மத்தியில் முரண்பாடுகள், பிளவுகள் ஏற்படாமல் ஒற்றுமையாக நாங்கள் மீண்டும் கூடி வட கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைப்பதற்கு ஒரு அணுகல் முறையை கடைப்பிடிக்க வேண்டும் நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம். நாங்கள் வீட்டு சின்னத்திலே நாங்கள் போட்டியிட்டு எல்லா தேர்தல்களிலும் தமிழ் தேசிய இனத்துக்காக ஒன்றுபட்டு உழைப்போம். அந்த வெற்றியை பெறவேண்டும் என்று கையெழுத்து வைக்கிறோம்.

3ஆவதாக தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் முக்கிய பதவிகளில் உள்ளவர்கள் உட்பட கட்சிக்குள்ளே முரண்பட்ட கருத்துக்களை ஓருவரை ஒருவர் தாக்குதலும், கட்சித் தலைமையை தாக்குவது போன்ற செயற்பாடுகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் தமிழரசு கட்சியின் தலைவர் என்ற ரீதியில் நான் நடவடிக்கை எடுக்கவில்லை என பலரும் குற்றம் சுமத்துகின்றார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அறிக்கை மற்றும் தவராசாவின் அறிக்கையின் மூலம் மிகவும் அதிருப்தி அடைந்த மக்களின் கருதுக்கிணங்க அவர்களுடைய பிரதிநிதிகள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் என்னிடம்விடுத்த கோரிக்கையை மையப்படுத்தி இந்த மாதம் 11, 12இல் மத்திய செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டு கட்சி பிளவுபடுத்தக்கூடிய வார்த்தை பிரயோகங்களை பிரயோகித்தவர்கள் மற்றும் பிரசார மேடைகளில் ஏனைய கட்சிகளை விமர்சித்தவர்கள் எந்த பொறுப்பில் இருந்தாலும் அவர்களுக்குரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அறிவிக்க தீர்மானித்திருக்கின்றேன்.

அத்துடன், எதிர்வரும் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஏனைய கட்சிகளை விமர்சித்தவர்கள் தமது கட்சிகளை பிளவுபடுத்தக்கூடியவாறு செயல்பட்டவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க உள்ளேன்.

எனவே, எங்களுடைய மக்களுடைய ஒற்றுமையான அரசியல் தீர்மானத்தை முன்வைத்து அது தொடர்பான பேச்சுவார்த்தையை எதிர்காலத்தில் நடத்தி இனப் பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

அதற்கு மாறாக செயற்படும் இவ்வாறான சக்திகள் கட்சியில் இருந்தால் என்ன வெளியில் இருந்தால் என்ன இவ்வாறான செயல்களுக்கு இடமளிக்கக்கூடாது என்பதற்காக மிக பொருத்தமான வகையில் தமிழரசு கட்சியினுடைய மத்திய செயற்குழு இந்த விடயங்களை ஆராய்ந்து அதற்கு பொருத்தமான வகையில் ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களாக அவர்கள் கருதப்பட்டதால், ஒழுங்கு விதியின் அடிப்படையில் அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.    

7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US