அமைச்சு பதவி வேண்டும் - ஜனாதிபதிக்கு மொட்டு கட்சியினர் நெருக்கடி
இன்று நடைபெறவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்புக்கு முன்னதாகவே இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமக்கு இராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்கப்படாவிட்டால் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டோம் என மொட்டு கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கொடுத்த அழுத்தமே இதற்குக் காரணம் என அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
நேற்று ஜனாதிபதியை சந்தித்த மொட்டு கட்சியில் உள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் சிலர் தங்களுக்கு மீண்டும் அரச அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதியிடம் தெரிவிக்கவும் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இதன்படி இன்று நடைபெறவுள்ள வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு முன்னர் இந்த அரச அமைச்சுப் பதவிகளை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.





ட்ரம்ப் அழுத்தத்தால் ஐரோப்பியம் ஒன்றியம் எடுக்கவிருக்கும் அதிரடி முடிவு: ரஷ்யாவிற்கு பின்னடைவு News Lankasri

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
