தபால் மூல வாக்குகளுக்கான விண்ணப்பம்: போலி விளம்பரங்கள் தொடர்பில் எச்சரிக்கை
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிக்கும் விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
வேட்பாளர்கள் போலி விளம்பரங்களுக்கு இரையாகாமல், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்திருப்பது தொடர்பான தகவல்களின்படி செயல்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சமூக வலைதளம்
சமூக வலைதளங்களில் பல்வேறு வழிகளில் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு ஆணையம் பொறுப்பேற்காது என்றும், அதில் உள்ள தகவல்கள் தவறானவை என்றும் மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது 05.08.2024 அன்று முடிவடையும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |