ஐ போன்களை பயன்படுத்த தடை! ரஷ்யா பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் ரஷ்யாவில் அப்பில் நிறுவனத்தின் கையடக்க தொலைபேசிகளை (i phone) அரச அதிகாரிகள் பயன்படுத்த ரஷ்யா தடை விதித்துள்ளது.
ரஷ்ய அதிபர் புடின் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அடுத்த ஆண்டு ரஷ்யாவில் அதிபர் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அதிபர் நிர்வாக துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஐ போன்களை பயன்படுத்த தடை
மேலும், அரசு தொடர்பான விவகாரங்களாக இருப்பினும் Smart phone பயன்படுத்த கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Smart phone மற்றும் i phone பயன்படுத்தினால் அவற்றின் மூலம் மேற்கத்தைய நாடுகள் உளவு பார்க்கும் வாய்ப்புள்ளதால் அதற்கு பதிலாக இரகசியமாக வேறு ஏற்பாடுகளை ரஷ்ய அரசாங்கம் செய்துள்ளது.
இணைய சேவைகளை பயன்படுத்துவதில் அதிகமாக ஈடுபட்டு வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) Smart phone பயன்டுத்துவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri