பிரச்சினைகள் இருந்தால் பிரதேச செயலகத்தினை தொடர்பு கொள்ளுங்கள் : விடுக்கப்பட்ட அறிவிப்பு

Mullaitivu Northern Province of Sri Lanka Floods In Sri Lanka
By Shan Dec 16, 2025 05:33 AM GMT
Report

பேரிடரால் பாதிக்கப்பட்ட ஒரு நபரேனும் விடுபட கூடாது என்ற ரீதியில் சரியான முறையில் கிராம சேவையாளர் பிரிவுகளில் குழுக்களை அமைத்து திறந்த விசாரணை இடம்பெற்று தீர்வினை வழங்குகின்றோம்.

மக்கள் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் பிரதேச செயலகத்தினை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றேன் என புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரும் கரைதுறைப்பற்று பிரதேச பதில் பிரதேச செயலாளருமான இராசரட்ணம் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக கரைதுறைப்பற்று கிராம சேவையாளர் பிரிவுகள் தொடர்பாக வருகின்ற மக்களின் முறைப்பாடுகள், பேரிடர் நிவாரணம் தொடர்பாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு தெளிவினை வழங்கும் முகமாக நேற்றையதினம் (15.12.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவருக்கு 18 நாட்களின் பின்னர் காத்திருந்த மகிழ்ச்சி

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவருக்கு 18 நாட்களின் பின்னர் காத்திருந்த மகிழ்ச்சி

சர்ச்சையான நிலவரங்கள்

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், தற்பொழுது இருக்கும் சுற்று நிருபத்தின் பிரகாரம் மக்களுக்குரிய நிவாரணம் வழங்குவது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு, திறைசேரியின் தெளிவான சுற்றுநிருபங்கள் காணப்படுகின்றது.

குறிப்பாக முள்ளியவளை வடக்கு, புதறிகுடா, மணவாளசிங்கன், கள்ளப்பாடு வடக்கு, தெற்கு போன்ற கிராம சேவையாளர் பிரிவுகளிலிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

பிரச்சினைகள் இருந்தால் பிரதேச செயலகத்தினை தொடர்பு கொள்ளுங்கள் : விடுக்கப்பட்ட அறிவிப்பு | Any Problems Please Contact Divisional Secretariat

அந்த அடிப்படையில் இவற்றினை ஆய்வு செய்வதற்காக விசேடமாக இரு குழுக்களும், அதேபோன்று திறந்த வெளிவிசாரணை நடாத்துவதற்காக உதவி பிரதேச செயலாளர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டு ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் நடைபெற்று வருகின்றது.

அதனடிப்படையில் ஒவ்வொரு விடயங்களையும் ஆராயும் போது மக்கள் குறிப்பாக எதிர்பார்ப்பது தங்களுடைய வீட்டு வளவுக்குள் நீர் வந்தால் அந்த கொடுப்பனவு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றார்கள்.

உண்மையில் வீட்டுக்குள் தண்ணீர் வந்தால் அதனை சுத்தப்படுத்தி குடியமர்வதற்காக 25,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.

ஏனைய சேதத்திற்குட்பட்டால் மதீப்பீடு செய்து எதிர்காலத்தில் கொடுப்பனவுகளை கொடுக்க வேண்டும். இந்த அடிப்படையிலே சுற்றுநிருபம் வெளியிடப்பட்டு அதன் பிரகாரமே நடைபெற்று வருகின்றது.

இருந்தாலும் சில நாட்களாக ஏற்பட்டிருக்கும் சர்ச்சையான நிலவரங்களுக்குரிய காரணங்களாக வெளிவளவுக்குள் நீர்வந்தமை, புகைக்கூடு, சமையல் அறையில் நீர் வடிந்தமை, தூவானம் அடித்த காரணத்தால் தமக்கு நிவாரணம் தரவேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்திருக்கின்றது.

ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் 

குறித்த காலப்பகுதியில் தொலைத்தொடர்பு இல்லாதால் சரியான முறையில் தொடர்பாடல் இருக்கவில்லை, சில கிராமங்களில் கிராம அலுவலகர்கள் சில வீடுகளுக்கு சென்று பார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கின்றது.

கரைதுறைப்பற்று பிரதேசத்தினை எடுத்து பார்த்தால் சிறப்பாக வேலைசெய்யும் பல கிராம சேவகர்கள் சேவை ஆற்றுகின்றார்கள். அதேநேரம் குறித்த காலப்பகுதியில் சரியான முறையில் வேலைசெய்யாத இரு உத்தியோகத்தர்களுக்கு எதிராக நாம் நடவடிக்கை எடுத்து மாற்றி பதில் உத்தியோகத்தரை நியமித்து நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

பிரச்சினைகள் இருந்தால் பிரதேச செயலகத்தினை தொடர்பு கொள்ளுங்கள் : விடுக்கப்பட்ட அறிவிப்பு | Any Problems Please Contact Divisional Secretariat

ஆகவே தற்போது எழுந்திருக்கின்ற குற்றச்சாட்டு பல உத்தியோகத்தர்களை பாதித்திருக்கின்றது. முள்ளியவளை வடக்கு தொடர்பாக விஷேட குழுவினரை கொண்டு ஆராய்ந்த போது அங்கே தனிநபர்களுக்கும் கிராம அலுலருக்கும் நீதிமன்ற வழக்கு வரை முறைப்பாடு இருக்கும் காரணத்தினால் பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதனை காணக்கூடியதாக இருக்கின்றது.

பாதிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. தனிப்பட்ட விரோதம் காரணமாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. எங்களுக்கு மக்கள் அனைவரும் சமம் ஆகவே அவர்கள் செய்வது தவறு என நாம் சுட்டிக்காட்ட விரும்பவில்லை.

எதிர்காலத்தில் ஏதாவது கிராமசேவகர் பிரிவில் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் நிச்சயமாக கிராம அலுவலகரால் தீர்வினை வழங்க முடியாவிட்டால் பிரதேச செயலகத்தினை நாடுங்கள்.

பிரதேச செயலகத்தால் தீர்வினை வழங்க முடியாவிட்டால் நீங்கள் மாவட்ட செயலகத்தினை நாடமுடியும். நாம் பல குழுக்களை அமைத்து அனைத்து இடங்களிலும் திறந்த விசாரணை இடம்பெற்று தீர்வினை வழங்குகின்றோம்.

பாதிக்கப்பட்ட ஒரு நபரேனும் விடுபட கூடாது அதே நேரம் பாதிக்கப்படாத ஒருவருக்கும் கொடுப்பனவை கொடுக்க கூடாது என்ற ரீதியில் சரியான முறையில் கண்காணித்து வருகின்றோம்.

முல்லைத்தீவில் எந்த பிரச்சினையும் இன்றி நடைபெறுகின்றது.எனினும் தற்பொழுது ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக விசாரணை செய்து வருகின்றோம். எனவே உண்மை நிலையினை மக்கள் அறியவேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாட்டினை செய்திருந்தோம்.

எனவே மக்கள் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் பிரதேச செயலகத்தினை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆசியாவிற்கு மேலும் பேரழிவுகளா..! அச்சமூட்டும் பாபா வங்காவின் கணிப்புக்கள்

ஆசியாவிற்கு மேலும் பேரழிவுகளா..! அச்சமூட்டும் பாபா வங்காவின் கணிப்புக்கள்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US