அனுராதபுரம் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட்டுள்ள அமைச்சர் நாமல்
அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றிருந்த இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, அங்கிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 11 தமிழ் அரசியல் கைதிகள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்சவை சந்திப்பதற்கான கோரிக்கையை விடுத்திருந்தனர்.
இதற்கமைய,அரசியல் கைதிகளின் வேண்டுகோளின் பேரில், அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுராதபுரம் சிறைக்கு இன்று சென்றதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகள் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன், அவர்களை மறுவாழ்வுக்கு உட்படுத்தல் மற்றும் சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைப்பது உள்ளிட்ட அவர்களின் பிரச்சினைகளை நான் கவனிப்பேன் என்றும் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
On a request by a group of prisoners to meet me, I visited Anuradhapura Prison today to hold talks with them to discuss their concerns. I assured them I would look into their issues including their rehabilitation & reintegration into society once they are cleared of charges.
— Namal Rajapaksa (@RajapaksaNamal) September 16, 2021