ஜனாதிபதி வழங்கிய 22 வாக்குறுதிகளில் ஒன்று மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வழங்கிய 22 வாக்குறுதிகளில் ஒரு வாக்குறுதி மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னணி ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான வெரிட்டே ரிசர்ச் ஆய்வு நிறுவனம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கிய 22 வாக்குறுதிகளில் ஒரு வாக்குறுதி மட்டுமே இதுவரையில் நிறைவேற்றப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2024ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை கண்காணிக்கும் நோக்கில் அநுர மீட்டர் எனப்படும் இணைய கண்காணிப்பு செயன்முறையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உழைக்கும் போதே செலுத்தும் வரி தொடர்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை மட்டுமே ஜனாதிபதி நிறைவேற்றியுள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொருளாதார மறுசீரமைப்பு, ஆட்சி முறைமை, ஊழல் ஒழிப்பு, சட்டம் ஒழுங்கு, சமூகப் பாதுகாப்பு, உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கி வழங்கப்பட்ட 22 வாக்குறுதிகளில் ஒன்று மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
அளிக்கப்பட்ட 22 வாக்குறுதிகளில் 35 வீதமானவை பகுதியளவில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
