சர்வதேசத்தில் நகர முடியாமல் தடுமாறும் அநுர!
இலங்கை அரசியலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் செயற்பாடுகள் அனைத்தும் உற்றுநோக்கப்படுகின்றன. அநுரகுமார ஜனாதிபதியான பின்னர் சில அதிரடி அறிவிப்புக்கள் வெளிவந்தன.
கடந்த கால அரசாங்கங்களை போன்று செயற்படப்போவதில்லை என்ற கருத்துக்களுடன் புதிய முயற்சிகள் சிலவற்றையும் இந்த அரசாங்கம் மேற்கொண்டது.
இருப்பினும் சர்வதேச மட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி அளவிற்கு களத்தில் இறங்கி அநுராவால் செயற்பட முடியுமா என்ற கேள்வி அரசியல்வாதிகளாலும் மக்களாலும் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் சர்வதேசத்தில் நகர முடியாமல் தடுமாறும் அநுரவின் நிலை மற்றும் அமெரிக்காவிற்கு தூதுவர் இன்றி திண்டாடும் சூழ்நிலைகள் குறித்து எமது லங்காசிறி ஊடகத்தின் ஊடறுப்பு நிகழ்ச்சியின் ஊடாக கலாநிதி கீத பொன்கலன்(அமெரிக்க சாஸ்பெரி பல்கலைக்கழகம்) தெளிவுபடுத்தியுள்ளார்.
