கோட்டாபய பதவி விலகினால் நாங்கள் தயாராக இருக்கின்றோம்! நாடாளுமன்றில் அநுர
ஜனாதிபதியும் பிரதமரும் அரசாங்கத்தை விட்டு வெளியேறினால் நாடாளுமன்றத்தில் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றையதின் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நீண்டகாலமாக பின்பற்றப்படும் பொருளாதார கொள்கைகளால் நாடு தற்போது பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நாட்டை பல தசாப்தங்களாக ஆட்சி செய்த ஆளும் குழுக்களின் தவறான பொருளாதார உத்திகளுக்கு இன்று நாம் முகம் கொடுத்து வருகின்றோம்.
இதற்கு முதன்மைப் பொறுப்பான கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான எந்தவொரு சர்வகட்சி அரசாங்கமும் பலன்களை வழங்காது. அவர் இராஜினாமா செய்தால், பிரதமர் இராஜினாமா செய்தால், நாடாளுமன்றத்தில் உடன்பாட்டை எட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri