அதிகம் பகிரப்படும் மற்றுமொரு தேரரின் முகம் சுழிக்க வைக்கும் காணொளி
அநுராதபுரம் எட்டு விகாரைகளின் தலைமை பிக்குவான பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள வன்புணர்வு மற்றும் சிறுமி துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விவகாரம் தற்போது பெரும் பேசு பொருளாக மாறி வருகின்றது.
இந்நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்து, இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் வரை பல்லேகம ஹேமரத்ன தேரரை இடைநீக்கம் செய்ய நேற்று(30) முடிவு செய்யப்பட்டது.
அட்டமஸ்தானதிபதியின் கடமைகளைக் கவனிப்பதற்காக தற்காலிகமாக ஈதலவெடுனுவெவே ஞானதிலக தேரரை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு தேரர் விவகாரம் நாளுக்கு நாள் சூடுபிடித்திருக்கும் சூழலில் இன்னுமொரு தேரரினுடைய காணொளி ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதில் தேரர் ஒருவர் மதுபோதையில் தவறான வார்த்தைப் பிரயோகங்களுடன் குறித்த கணொளியில் பேசியுள்ளமை முகம் சுழிக்க வைத்துள்ளது.
இந்த விடயங்கள் உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி....