மற்றுமொரு ஹேக்கர் தாக்குதல் குறித்து எதிர்க்கட்சி வெளியிட்டுள்ள தகவல்
இலங்கைர்களின் பல கோடி ரூபா பெறுமதியான பணம் மற்றுமொரு ஹேக்கர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
வேலைவாய்ப்புகளுக்காக இஸ்ரேல் சென்றுள்ள இலங்கை இளைஞர், யுவதிகளினால் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாட்டுக்கு அனுப்பப்பட்ட பல கோடி ரூபாய் பணம் ஹேக்கர் (Hacker) தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.
இலங்கையின் முன்னணி அரச வங்கி ஒன்றின் அறிவுறுத்தலின் பேரில், இந்த ஊழியர்கள் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தனியார் நிறுவனம் ஒன்றின் ஊடாகவே இப்பணத்தை இலங்கைக்கு அனுப்பியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் பொதுவாக மாதம் ஒன்றுக்கு சுமார் 3,000 டாலர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்கின்றார் என தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அனுப்பப்பட்ட பணம் கிடைக்கவில்லை என்பதை அறிந்ததும், பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அது குறித்து இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
எனினும், இதுவரையில் அவர்களுக்கு அது தொடர்பாக எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
குறித்த தனியார் நிறுவனம் ஊடாக பணத்தை அனுப்புமாறு அறிவுறுத்திய இலங்கையின் அரச வங்கிக்குச் சென்று இது குறித்து வினவிய போது, "தூதரகத்திற்குச் செல்லுமாறு" அங்கிருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், தூதரகத்திற்குச் சென்று கேட்கும் போது "வங்கிக்குச் செல்லுமாறு" கூறி இழுத்தடிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால் பணத்தை அனுப்பிய இலங்கைப் பணியாளர்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருப்பதாக அவர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 17 மணி நேரம் முன்
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri