வடக்கு மாகாணத்தில் மேலும் 20 பேருக்கு கோவிட் தொற்று உறுதி

covid spread have been confirmed to be infected with the virus
By Independent Writer Mar 06, 2021 11:51 AM GMT
Independent Writer

Independent Writer

in மருத்துவம்
Report

வடக்கு மாகாணத்தில் மேலும் 20 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 12 பேர் மன்னாரிலும், 8 பேர் யாழ்ப்பாணத்திலும் கண்டறியப்பட்டனர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று 304 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் எவருக்கும் தொற்று இல்லை என அறிக்கையிடப்பட்டது.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று 457 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் 20 பேருக்குக் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட நவாலியைச் சேர்ந்த ஒருவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர் நவாலியில் கடந்த வாரம் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட ஆசிரியையுடன் பஸ்ஸில் முல்லைத்தீவுக்குச் சென்று திரும்பியவர்.ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மெலிஞ்சி முனையில் 6 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.

இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் இறுதிச் சடங்கு ஒன்றில் பங்குபற்றியவர்கள்.இதேவேளை, மன்னார் நகரிலுள்ள நிதி நிறுவனத்தில் 5 பேருக்குக் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும், மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரி சபையில் பணியாற்றும் இருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் கோவிட் தொற்று அறிகுறிகளுடன் மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர்கள்.

மன்னார்,மாந்தை மேற்கு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.அதேவேளை, மன்னார் நகரிலுள்ள சிகையலங்கரிப்பு நிலைய தொற்றாளர்களுடன் தொடர்புடைய இருவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.மன்னார் பொாலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் இன்று கோவிட்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US