வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் (Photos)

Sri Lanka Army Sri Lanka Police Mullaitivu
By Kanamirtha May 19, 2022 01:29 PM GMT
Report

வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் தொடர்பிலான விசேட முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் க.விமலநாதனுடைய தலைமையில் இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு இடம்பெற்றுள்ளது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் நிகழ்வுகள் எதிர்வரும் 30.05.2022 அன்று பாக்குத்தெண்டலுடன் ஆரம்பமாகி 06.06.2022 அன்று தீர்த்தம் எடுத்தல் நிகழ்வும் இடம்பெறும்.

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் (Photos) | Annual Pongal Festival Historic Varappalai Amman

அதனைத் தொடர்ந்து 12.06.2022 அன்று காட்டா விநாயகர் ஆலயத்தில் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்று 13.06.2022 அன்று காலை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து பண்டம் எடுத்து வரப்பட்டு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் உடைய பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றன.

இந்த பொங்கல் நிகழ்வு தொடர்பான முன்னேற்பாடுகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஆலய உற்சவத்துடன் சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்களுக்கும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆலய நிர்வாகத்தினர் ஆகியோருக்கும் இடையில் இடம்பெற்றது.

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் (Photos) | Annual Pongal Festival Historic Varappalai Amman

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் குண்டு தாக்குதல் காரணமாகவும் 2020ஆம், 2021ஆம் ஆண்டுகளில் கோவிட் காரணமாகவும் ஆலய உற்சவம் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் இடம்பெற்ற நிலையில், இவ்வாண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த உற்சவத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஆலயத்திற்கு வருகின்ற வீதிகள் ஆலயத்தில் குடிநீர் மலசலக்கூட வசதிகள், சுகாதார வசதிகள், பாதுகாப்பு, போக்குவரத்து, மின்சார வசதிகள் என அனைத்து விடயங்கள் தொடர்பிலும் அனைத்துத்துறை சார்ந்த அதிகாரிகளுடனும் இந்தக் கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இவ்வாறு ஒவ்வொரு துறை சார்ந்த விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடல் இடம்பெற்ற நிலையில், ஆலய உற்சவத்திற்கு ஏற்பாடுகளை அனைத்து தரப்பினரும் செய்வதாக உறுதியளித்துள்ளனர்.

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் (Photos) | Annual Pongal Festival Historic Varappalai Amman

மேலும் இந்த முன்னேற்பாடுகள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்வதற்கான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 03.06.2022 திகதி காலை 10.30 மணிக்கு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம்பெறும் எனவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் மேலதிக மாவட்டச் செயலாளர்கள், பொலிஸார், இராணுவத்தினர், பிரதேச செயலாளர், திணைக்கள தலைவர்கள் ஆலய நிர்வாகத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.

அத்தோடு இந்த ஆலயத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக அடுத்த கூட்டத்தில் தெரியப்படுத்தப்படும் எனவும் ஆலயத்தில் பக்தர்கள் வருவதற்கு இம்முறை எந்தத் தடைகளும் இல்லாத நிலையில், ஆலயத்தில் விசேடமான பொங்கல் வழிபாடுகள் வழமைபோன்று இடம்பெறும் எனவும் ஆலயத்தில் பக்தர்களுடைய நேத்திக் கடன்களைச் செய்யக்கூடிய வகையிலே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US