ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மகளீர் அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடலும் கௌரவிப்பு நிகழ்வும்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட மகளீர் அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடலும் கௌரவிப்பு நிகழ்வும் இன்று (08) கட்சியின் மகளீர் அமைப்பின் தலைவரும், முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான ந.கேதினி தலைமையில் முல்லைத்தீவு முள்ளியவளை அரிமத்தியா ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனனும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.ரி கணேசலிங்கமும்சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டனர்.
கட்சியின் கனடா கிளை அமைப்பாளர் க. கந்தசாமி, அகில இலங்கை கட்சி இனைப்பாளர் த. தவராசா, முன்னாள் மாகாண சபை விவசாய அமைச்சர் க. சிவநேசன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன், முல்லைத்தீவு மாவட்ட இளைஞரணி தலைவர் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பரிசில்களும் வழங்கி கௌரவிப்பு
இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி கட்சியில் ஒரு வருட அங்கத்துவத்தை பூர்த்தி செய்த 18 பிரதேச மகளிர் குழுக்களின் தலைவிகள் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் தலைவர் த. சித்தார்த்தன் அவர்களால் பென்னாடை போர்த்தி சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு மகளிர் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட மகளிர் குழு அங்கதவர்கள் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி கட்சி அமைப்பாளர்கள் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |