கோவிட் 19 தொற்று! - சுவிஸ் அரசு விடுத்துள்ள அறிவிப்புகள்

Covid
By Independent Writer Mar 13, 2021 08:35 PM GMT
Report

 சுவிஸ் அரசு நேற்றைய ஊடக மாநாட்டில் தற்போதைய முடக்கத்திலிருந்து மெல்ல வெளிவரும் தமது நடவடிக்கையினை விளக்கியுள்ளது.

இச்சந்திப்பில் சுவிஸ் அதிபர் குய் பார்மெலின் மற்றும் சுகாதார அமைச்சர் அலான் பெர்சே ஆகியோர் தகவல்களை வழங்கியுள்ளார்.

சுவிஸ் அரசு தற்போது கடைப்பிடிக்கும் மகுடநுண்ணித் (கோவிட்-19) தொற்றுத் தடுப்பு நடவடிக்கை முறைகள் விளக்கப்பட்டுள்ளன. இதேவேளை அடுத்த வெள்ளிக்கிழமை மேலும் சில தளர்வு நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தளர்வுகள் தொடர்பில் மாநில அரசுடன் சுவிஸ் நடுவனரசு கலந்துபேசி வருகின்றது. இரண்டாம் கட்ட தளர்வுகள் எப்போது அறிவிக்கப்படும் என்பதை இன்னும் உறுதிப்படுத்தி அறிவிக்கமுடியவில்லை. இதன் பெறுபேறுகளை அடுத்த கிழமை எதிர்பார்க்கலாம்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இத்தளர்வு நடவடிக்கைகள் நடைமுறைக்கு வருகின்றன: தனியார் சந்திப்புக்கள் குடும்பச் சந்திப்புக்களில் இதுவரை ஆகக்கூடியது ஐவர் பங்கெடுக்கலாம் என இருந்து வந்தது.

எதிர்வரும் திங்கள் முதல் இத்தொகை இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டு, 10 குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் சந்தித்துக் கொள்ளலாம். இத் தளர்வு அறிவிக்கப்பட்டாலும், முடிந்தளவு பல்லில்லங்களில் இருந்து பல் குடும்பங்களாக ஒன்றுகூடுவதைத் தவிர்க்க சுவிஸ் அரசு வேண்டுகை விடுத்துள்ளது.

உணவகங்கள் உணவகங்கள் விருந்தினர்களை தமது வெளியரங்கு உப்பரிகைத் தளங்களில் அனுமதிக்கலாம். விருந்தினர் எழுந்து உலாவுதலாகாது. உணவகத்திற்கு வருகை அளிக்கும் விருந்தினர்கள் கட்டாயம் இருக்கையில் இருக்க வேண்டும்.

உணவு உண்ணும்போது மட்டும் பாதுகாப்பு முகவுறையினை நீக்கிக்கொள்ளலாம். ஏனையபடி உணவக வளாகம் முழுவதும் முகவுறை அணிந்திருத்தல் கட்டாயம் ஆகும். ஒரு மேசையில் ஆகக்கூடியது நான்கு பேர் மட்டுமே இருக்கலாம்.

ஒரு மேசைக்கும் அடுத்த மேசைக்கும் இடையில் குறைந்தது 1.5 மீற்றர் இடைவெளி பேணப்பட வேண்டும் அல்லது தடுப்புச்சுவர் இருக்கவேண்டும். பொழுதுபோக்கு நிறுவனங்கள் பொது ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்கள் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்படுகின்றது.

விலங்குக்காட்சிசாலை மற்றும் தாவரவியல் பூங்கா என்பன முழுமையாகத் திறக்கலாம். கட்டட உட்பகுதியில் அனைவரும் முகவுறை அணிந்திருத்தல் கட்டாயமாகும்.

எப்போதும் உரிய இடை வெளி பேணப்பட வேண்டும். பார்வையாளர்களுடன் நிகழ்வுகள் ஆகக்கூடியது 150 ஆட்கள் பார்வையாளர்களாகப் பங்கெடுக்கக்கூடிய நிகழ்வுகள் வெளி அரங்கில் நடைபெறலாம்.

(இது உதை பந்தாட்டப் போட்டி போன்ற நிகழ்விற்குப் அல்லது திறந்த வெளி இசை நிகழ்வுகளுக்குப் பொருந்தும்) வெளியரங்கில் இல்லாமல் நிகழ்வு உள்ளரங்க நிகழ்வாகின் ஆகக்கூடியது 50 ஆட்களே பங்கெடுக்கலாம்.(இவ்விதி திரையரங்கு, நாடகவரங்கு, நிகழ்வரங்குகளுக்கும் பொருந்தும்)

அரங்கின் அளவு வழமையான கொள்ளளவில் 3ல் ஒருபகுதி ஆட்களே மேற்கூறிய ஆக்கக்கூடிய தொகையாக அமையலாம். அதாவது 50 மக்கள் இருக்கும் உள்ளரங்கின் அளவு 150 ஆட்கள் கொள்ளக்கூடிய அளவாக இருக்க வேண்டும்.

PauseUnmute Loaded: 63.56% Fullscreen VDO.AI ஆட்கள் எழுந்து உலாவலாகாது இருக்கையில் இருத்தலும் இத்தளர்வின் நிபந்தனையாகும். அதுபோல் உரிய இடைவெளி 1.5 மீற்றர் கடைப்பிடிக்கப்பட வேண்டும் அல்லது ஒன்றைவிட்ட ஒரு இருக்கை வெறுமையாக இருத்தல் வேண்டும்.

பார்வையாளர் நிழ்ச்சிகளில், நிகழ்வைப் பார்த்துக்கொண்டு உணவுண்ணல் ஆகாது. நிகழ்விற்கு இடைவேளை அறிவிப்பது தவிர்க்கப்படவேண்டும். பிறநிகழ்வுகள் ஆகக்கூடியது 15 ஆட்கள் பங்கெடுக்கும் நிகழ்வுகளுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்படுகின்றது.

இவை அருங்காட்சியம் அல்லது மன்றத்தின் ஒன்றுகூடல் அல்லது பிற ஏனைய பொழுதுபோக்கு அல்லது ஓய்வு நிகழ்வுகளாக இருக்கலாம். விளையாட்டும் பாண்பாட்டு நிகழ்வும் குழுக்களாகப் பங்கெடுக்கும் செயற்பாடுகளில் ஆகக்கூடியது 15ஆட்கள் மீண்டும் பங்கெடுத்துக் கொள்ளலாம்.

ஒருவருக்கொருவர் போதிய இடைவெளி (1.5மீற்ரர்) கடைப்பிடிக்க வேண்டும். வெளியரங்கிலும் அதுபோல் உள்ளரங்கிலும் முகவுறை அணிதல் கட்டாயம் ஆகும்.

தாங்காற்றல் உடற்பயிற்சி மேற்கொள்வோருக்கும் அதுபோல் குழுவாக பாடற்பயிற்சி செய்வோருக்கும் கட்டாய முகவுறை அணிய வேண்டும் எனும் விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.

ஒருவரை ஒருவர் தொட்டுத்தீண்டி உள்ளரங்கில் மேற்கொள்ளப்படும் விளையாட்டுப் பயிற்சிகள் மேற்கொள்வதற்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொர்ந்தும் நீடிக்கின்றது.

வெளியரங்கில் முகவுறை அணிந்து விiயாட்டுப் பயிற்சி மேற்கொள்ளலாம். ஆனால் போட்டிகள் நடாத்த தொடர்ந்தும் தடை நீடிக்கின்றது. கட்டாய முகவுறை அணிதலில் தளர்வு தடுப்பூசி இட்டுக்கொண்டு மூதாளர் மற்றும் பராமரிப்பு இல்லத்தில் வாழ்பவர்களுக்கு கட்டாய முகவுறை அணியும் விதியில் இருந்து தளர்வு அறிவிக்கப்படுகின்றது.

குறைந்தது 80 வீதப் பணியாளர்களை கிழமைக்கு ஒருமுறையேனும் மகுட நுண்ணித் தொற்றுப்பரிசோதனை மேற்கொள்ளும் நிறுவனங்களின் பணியாளர்களுக்கு, நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவருடன் சந்திப்பு நேர்ந்தால் தம்மை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும் என்ற விதியில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுகின்றது.

மகுடநுண்ணித் தொற்றிற்கு ஆளானவருடன் தொடர்பிருந்தால் அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனும் விதியிலிருந்து தடுப்பூசி இட்டுக்கொண்வருக்கு விலக்கு அளிக்கப்படுகின்றது.

வகுப்பறையில் நேரில் பாடம் கட்டாயப் பாடசாலை கடந்து மேற்கல்வி புகட்டும் பாடசாலைகளிலும், பல்கலைக்கழகத்திலும் வரைமுறைகளுடன் நேரடி வகுப்பு நடைபெற அனுமதி அளிக்கப்படுகின்றது. ஆகக்கூடியது 15 ஆட்கள் வகுப்பில் பங்கெடுக்கலாம். அறையின் கொள்ளளவு மும்மடங்காக அமைய வேண்டும்.

முகவுறை அணிதல் கட்டாயம் ஆகும். அதுபோல் உரிய இடைவெளியும் பேணப்பட வேண்டும். தேர்வு சுவிற்சர்லாந்து நாடுதழுவிய மற்றும் மாநில அரசின் விதிப்படி நடைபெறும் அனைத்து கற்கை முதிர்ச்சித் தேர்வுகளும் 2021ல் வழமைபோல் நடைபெறும். வழமையான ஒழுங்கு முறமையில் தேர்வுகளை நடாத்த வாய்புக் கூடவில்லையானால் விதிவிலக்குகள் அவசரகாலச் சூழலிற்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும்.

மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

28 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, கொழும்பு, London, United Kingdom

08 Dec, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், உரும்பிராய்

06 Dec, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, இந்தியா, British Indian Ocean Terr., தெஹிவளை

12 Dec, 2018
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US