தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்!
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கபட்டுள்ளார்.
தமிழக பாஜக இனியும் திராவிட பாஜக இல்லை என அறிவித்திருக்கின்றது அக்கட்சியின் மேலிடம்.
அண்ணாமலை காவல்துறையில் மிகபெரிய பதவியில் இருந்தவர் என்பதால் தமிழகத்தில் அவருக்கென ஒரு ஆதரவு உண்டு, ஒரு எதிர்பார்ப்பு உண்டு.
உட்கட்சி மற்றும் சில சதிகள் காரணமாக அவர் தோற்கடிக்கபட்டிருந்தாலும் மக்களிடம் அவருக்கு இருந்த ஆதரவு குறையவில்லை. அவர் செல்ல போகும் பாதை கொஞ்சம் சவாலானது.
1960களில் இருந்து தேசியத்தை மறந்த மண்ணில் அதை திருப்பி மலர வைப்பது என்பது சவாலான பணி. எனினும் அண்ணாமலைக்கு தமிழகம் செவிசாய்க்கும், அவரின் நியாயமான குரலில் பல உண்மைகள் தெரியவரும் என்பது நம்பிக்கை.
குறைந்தபட்சம் சில்லறை உபிக்களின் மிரட்டலாவது குறையும், அதற்கொரு வலுவான குரலாக அண்ணாமலை குரல் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதன் முதலாக ஒரு கட்சிக்கு மிகபடித்த, மிகபெரும் பதவியில் இருந்த ஒரு இளம் மேதை ஒருவர் தலைவராக நியமிக்கபட்டிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை அவர்களுக்கு பாஜகவின் முன்னாள் தேசிய குழு உறுப்பினர் எச்.ராஜா வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 17 மணி நேரம் முன்
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri