அரச சேவையாளர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை(Video)

Jaffna Hospitals in Sri Lanka Nothern Province P. S. M. Charles
By Theepan Jun 27, 2023 10:32 AM GMT
Report

அரசசேவையில் இணைந்துள்ள உத்தியோகத்தர்கள் இந்த சமூகத்திற்கு எதையாவது செய்ய வேண்டும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரம் தெரிவித்துள்ளார்.

யாழ்.தாதியியல் கல்லூரியில் இன்றையதினம் (27.06.2023) இடம்பெற்ற குருதி கொடையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வில்  கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ''நான் கடமையாற்றிய திணைக்களங்கள் மற்றும் காரியாலயங்களில் அந்தந்த நலன்புரி அமைப்புகளின் ஊடாக இரத்ததான முகாம்களை கட்டாயமாக செய்ய வேண்டும் என அறிவுறுத்தி அந்த நடவடிக்கைக்கு அவர்களை உள்வாங்கும் நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தேன்.

அரச சேவையாளர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை(Video) | An Event To Honor Blood Donors In Jaffna

இரத்ததான பணி  முன்னெடுப்பு

எனினும் தற்பொழுது நான் அரசாங்க அதிபராக பதவியெற்ற பின்னர்  சகல பிரதேச செயலக பிரிவுகளுக்கும் அந்தந்த பிரிவுகளில் இரத்ததான முகாம்களை நடத்தி செயற்படுத்த வேண்டும் என்று கோரி இருக்கின்றேன்.

அண்மையிலும் சில பிரதேச செயலகங்களில் இரத்ததான முகாம்கள் இடம்பெற்றிருந்தமை நீங்கள் அறிந்த விடயம். இந்த இரத்ததான பணியானது தொடர்ந்து மேற்க்கொள்ளப்பட வேண்டும்.


இதற்கு அரசாங்க உத்தியோகத்தர்கள் என்ற வகையில் எங்களுடைய அலுவலகங்கள் தொடர்ச்சியாக தங்களுடைய பங்களிப்பை வழங்குவார்கள் என கூறி வைக்க விரும்புகின்றேன்.

அத்துடன் அரச சேவையில் இணைந்துள்ள அரச உத்தியோகத்தர்கள் எதையாவது இந்த சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்ற மனப்பாங்கோடு இருக்க வேண்டும்"என்றார்.

குருதி கொடையாளர்கள் கௌரவிப்பு

மேலும் இந்த நிகழ்வில், 100 குருதிக் கொடையாளர்களும், 50 குருதி கொடை முகாமை ஒழுங்குபடுத்துபவர்களும் கௌரவமளிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், யாழ்ப்பாண மாவட்ட அதிபர் அ.சிவபாலசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

அரச சேவையாளர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை(Video) | An Event To Honor Blood Donors In Jaffna

இதேவேளை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்திய மூர்த்தி, வைத்தியசாலை அதிகாரிகள், இரத்த வங்கி உத்தியோகத்தர்கள், தேசிய குருதிமாற்று பிரயோக சேவையினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு குருதிக் கொடையாளர்களுக்கு கெளரவம் வழங்கியுள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US