யாழில் விபத்துக்குள்ளான முதியவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் - கல்லூண்டாயில் விபத்துக்குள்ளான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அராலி கிழக்கு, அம்மன் கோவிலடி பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய வைரமுத்து முருகையா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்துச் சம்பவம்
குறித்த முதியவர் கடந்த 8ஆம் மாதம் 26ஆம் திகதி துவிச்சக்கர வண்டியில் யாழ்ப்பாணத்தில் இருந்து, அராலியில் உள்ள தனது வீடு நோக்கி வந்துகொண்டிருந்த போது கல்லூண்டாய் பகுதியில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் சிக்கியுள்ளார்.
இதன்போது, அவர் மயக்கமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தொடர்ச்சியாக அவர் மயக்க நிலையில் இருந்தமையினால் வைத்தியசாலையால் அவருக்கு சிகிச்சை வழங்க முடியாததையடுத்து கடந்த 20ஆம் திகதி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்தே அவர் நேற்றையதினம்(25) உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
