கிழக்கு ஆளுநருக்கு சேறுபூசும் நடவடடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
கிழக்கு ஆளுநருக்கு சேறுபூசும் நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை - கல்முனையில் இன்றைய தினம் (03.04.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நான் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றேன். நாங்கள் இந்த நாட்டின் எதிரணியாக இருந்தாலும், எங்களுடைய கருத்துக்களையும் கேட்டு செயற்படும் ஆளுநராக இவர் இருக்கின்றார்.
இவ்வாறு அவரின் செயற்பாடுகள் இருக்கின்ற போது ஒரு சில தனிநபர்கள் அவருக்கெதிராக மிக மோசமாக தன்னுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள்.
பொத்துவில் கனகர் கிராம காணி தொடர்பில் நான் 2012ஆம் ஆண்டில் இருந்து நடவடிக்கை எடுத்து அந்த மக்களுக்கு அதனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று செயற்பட்டுக் கொண்டிருந்தோம்.
கிழக்கு மாகாண ஆளுநர், எமது மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர், சகோதர நாடாளுமன்ற உறுப்பினர் எல்லோருமாக இணைந்து அக்காணிகளை அந்த மக்களுக்கு நாங்கள் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தும் எங்களுக்கும் சேறுபூசும் செயற்பாடுகளே இடம்பெற்றன.
அதே போன்றே தற்போது ஆளுநருக்கும் அவ்வாறு சேறு பூசும் செயற்பாட்டையும் அவர் முன்னெடுத்திருக்கின்றார்கள். அவ்வாறு செயற்படுபவர்கள் ஒரு மனநோயாளிகளாகவே இருக்க வேண்டும்.
ஒரு சிலர் இவ்வாறு செயற்படுகின்ற போது எமது மக்களுக்குக் கிடைக்க வேண்டிய பலன்கள் இல்லாமல் போகும் வாய்ப்புகளே இருக்கின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |