இலங்கை வரும் அமெரிக்காவின் உயர்மட்ட தூதுக்குழு
அமெரிக்க திறைசேரி திணைக்களம் மற்றும் ராஜாங்க திணைக்களம் ஆகியவற்றின் உயர்மட்ட தூதுக்குழுவினர் நாளைய இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதுடன் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தங்கி இருப்பார்கள்.
முக்கியமான உயர் அதிகாரிகள்
இந்த தூதுக்குழுவில் திறைசேரி திணைக்களத்தின் ஆசியாவுக்கான பிரதி உதவி ராஜாங்க செயலாளர் றொபர்ட் கெப்ரோத், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பிரதி உதவி ராஜாங்க செயலாளர் கெலி கீடர்லன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
Pleased to welcome @USTreasury’s Robert Kaproth & @StateDept’s Kelly Keiderling to Sri Lanka. During the visit, we’ll meet w/ government officials, economists, int’l orgs and others to discuss ways the US can help SL address its urgent economic challenges. https://t.co/Lc3pyjyj72
— Ambassador Julie Chung (@USAmbSL) June 25, 2022
இவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அரசியல் பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்திக்க உள்ளனர்.
இலங்கையில் தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு அமெரிக்க உதவக் கூடிய மிகவும் பலன் தர முறைமை தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன.
இலங்கை எதிர்நோக்கும் பாரதூரமான பொருளாதார சவால்கள்
பாரதூரமான பல பொருளாதார சவால்களை இலங்கை எதிர்நோக்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தில், இலங்கை பொருளாதார வளர்ச்சிக்கு உதவவும், இலங்கையின் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தவும் முயற்சித்து வருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்க் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களில் அமெரிக்கா, இலங்கை பல்வேறு துறைகளை மேம்படுத்த 159 மில்லியன் டொலர்களை வழங்கும் என அறிவித்ததது.
எதிர்காலத்திலும் இப்படியான உதவிகள் வழங்கப்படும் எனவும் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவியை பெற இலங்கை எடுத்த முடிவுக்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பும் கிடைக்கும் எனவும் அமெரிக்க தூதுவர் கூறியுள்ளார்.