ஈரானுடன் ஒப்பந்தம் தனக்கு ஒரு பொருட்டல்ல..! பேச்சுவார்த்தைகளுக்கு நடுவில் ட்ரம்பின் அறிவிப்பு
ஈரானுடன் ஒப்பந்தம் எட்டப்பட்டாலும் சரி, எட்டப்படாவிட்டாலும் சரி, அது எனக்கு ஒரு பொருட்டல்ல என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா ஈரானின் விமானப்படை, கடற்படை மற்றும் தலைமையை ஒழித்துவிட்டது என்றும், தற்போது ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க முயன்று வருகிறது என்றும் அவர் தனது முந்தைய கூற்றுகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை
மேலும், பயந்த, பலவீனமான அல்லது கஞ்சத்தனமான" நாடுகளின் சார்பாக அமெரிக்கா இதைச் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேட்டோ எங்களுக்கு உதவவில்லை எனபதையும் சுட்டிக்காட்டியுள்ளார். என்ன நடக்கிறது என்று பார்ப்போம், ஆனால் என்னைப் பொறுத்தவரை எனக்குக் கவலை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, என்ன நடந்தாலும் சரி, நாம் வெற்றி பெறுவோம் என்று பாகிஸ்தானில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்துகொண்டிருக்கும் வேளையில், வெள்ளை மாளிகையில் வைத்து குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமாபாத்தில் பல மணிநேரமாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் குறித்து தனக்கு ஏராளமான தகவல்கள் கிடைத்து வருவதாகவும் குறிப்பிட்ட அவர், என்ன நடந்தாலும் சரி, நாம் வெற்றி பெறுவோம், அவர், நாம் அந்த நாட்டை முற்றிலுமாகத் தோற்கடித்துவிட்டோம் என்று மீண்டும் குறிப்பிட்டுள்ளார்.
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri