அம்பன் பிரதேச வைத்தியசாலை நோயாளர் காவு வண்டியை மீள வழங்க கோரிக்கை
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பிரதேச வைத்தியசாலையிலிருந்து நோயாளர் காவு வண்டியை மீள வழங்க கோரி மக்கள் கோரிக்கை ஒன்றினை முன்வைத்திட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்வில் மேலும் தெரியவருவதாவது அம்மன் பிரதேச வைத்தியசாலையில் இரவு வேலைகளில் மருத்துவ சேவை இடம்பெறாமையினால் படுத்துத் துறை ஆதார வைத்தியசாலைக்கு நோயாளர்கள் காவு வண்டி மூலம் நோயாளர்களை அனுப்புவது வழமையாக இருந்து வருகிறது
இந்நிலையில் அம்பன் பிரதேச வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டி வேலனை பிரதேச வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.
இந் நிலையில் அம்பன் பிரதேச வைத்தியசாலைக்கு இரவு வேளையில் செல்கின்ற நோயாளர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
குறிப்பாக கற்ப்பிணி தாய்மார்கள், முதியவர்கள் பெரிதும் பாதிக்கப் படுகின்றனர். இந்நிலையில் அம்பன் பிரதேச வைத்திய சாலைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டியை மீள வழங்கக் கோரி இன்றைய தினம் கிராம மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மருத்துவ மனை முன்பாக களை 9:30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அம்பன் பிரதேச வைத்திய சாலையை சூழ 2500 குடும்பங்கள் வரை வசித்து வருகின்றமை குறிப்பிடத் தக்கது