யாழ்.பல்கலைக்கழகத்துக்கு விஜயம் மேற்கொண்ட பிரான்ஸ் தூதுவர் (Photos)
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ப்ராங்கோஸிஸ் பக்றெற் தலைமையிலான குழு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜாவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது இன்று(26.09.2023) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது.
கற்றல் மற்றும் ஆராய்சி செயற்றிட்டங்கள்
பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்த பிரான்ஸ் தூதுவர் தலைமையிலான குழுவினரை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி. சிறிசற்குணராஜா,
பதிவாளர் வி. காண்டீபன், பேராசிரியர் சி. ரகுராம் ஆகியோர்
சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
சமகால விடயங்கள் மற்றும் பிரான்ஸ் தூதரகத்தினூடாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முன்னெடுக்கப்படும் கற்றல் மற்றும் ஆராய்சி செயற்றிட்டங்களின் மீளாய்வு குறித்து இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ப்ராங்கோஸிஸ் பக்றெற், கலாசார ஒத்துழைப்புக்கான துணைத் தூதுவர் ஒலிவியா பெலீமியர் மற்றும் பிரான்ஸ் தூதரகத்தின் ஊடகத் தொடர்பாடல் அதிகாரி டினுசா இல்லப்பெருமா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

கனடாவில் அடைக்கலம் பெற்றுள்ள பயங்கரவாதிகள்: இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி காட்டம் (Video)

