உலகின் மிகப்பெரிய அலுமினிய ஆலை மீதான அதிரடி தாக்குதல்! வரலாற்று உச்சத்தை எட்டிய அலுமினியத்தின் விலை
மத்திய கிழக்கில் நடந்து வரும் போரின் காரணமாக இரண்டு பெரிய அலுமினிய உற்பத்தி நிறுவனங்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அலுமினியத்தின் விலை கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது.
மின்னணுவியல், பேக்கேஜிங், கட்டுமானம் மற்றும் வாகன உற்பத்தியில் பயன்படுத்தப்படும் உலோகமான அலுமினியத்தின் விலை, நேற்று (30) லண்டன் உலோகப் பரிவர்த்தனை நிலையத்தில் ஒரு மெட்ரிக் டொன்னுக்கு 3%க்கும் மேல் உயர்ந்து $3,401 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விநியோக சங்கிலியில் இடையூறு
இப்பகுதியின் முன்னணி உற்பத்தியாளரான எமிரேட்ஸ் குளோபல் அலுமினியம் (EGA), அபுதாபியில் உள்ள தனது ஆலை கடுமையாக சேதமடைந்துள்ளதாகக் கூறியுள்ளது.
இதற்கிடையில், பஹ்ரைன் அலுமினியம் நிறுவனமும் தனது ஆலையில் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிட்டு வருகிறது.
இந்த விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இடையூறு, எதிர்காலத்தில் அலுமினியம் தொடர்பான பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த விலை உயர்வு, குறிப்பாக உலகளாவிய கட்டுமானம் மற்றும் வாகன உற்பத்தித் துறைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri