வரவு செலவுத்திட்டம் பலவீனமானது என்றாலும் ஆதரவாக வாக்களிப்பேன் – விஜயதாச ராஜபக்ச
வரவு செலவுத் திட்டம் பலவீனமானது என்றாலும் அதற்கு ஆதரவாகவே வாக்களிக்கப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச(Wijeyadasa Rajapakshe) தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று ஊடகவியலாளர்களிடம் அதனைத் தெரிவித்துள்ளார்.
இம்முறை வரவு செலவுத் திட்டம் நாட்டின் பொருளாதாரத்தை பாரிய அச்சுறுத்தலுக்கு இலக்காகக் கூடியது என்றாலும் மாற்று வழிகள் எதுவுமில்லை என்ற காரணத்தினால் ஆதரவாக வாக்களிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
வருமானம் 2000 பில்லியன் ரூபாவாகவும், செலவு 3000 பில்லியன் ரூபாவாக காணப்படுகின்றது. இந்த செலவுகளை எவ்வாறு செய்வது என்பது பற்றி வரவு செலவுத் திட்டத்தில் தெளிவாக விளக்கப்படவில்லை.
வரவு செலவுத் திட்டம் எவ்வளவு பலவீனமானது என்றாலும் அடுத்த ஆண்டுக்கான அரச சேவையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். எனவே மாற்று வழியில்லை என்பதனால் இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதனை தவிர வேறு வழியில்லை.
வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடித்தால் மாற்று அரசாங்கமொன்றை உருவாக்க ஆயத்தமாக வேண்டும்.
அவ்வாறான ஓர் சாத்தியம் இல்லையென்றால் இந்த வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்க வேண்டும் என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.