ஐ.நா மனித உரிமைப் பேரவையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பொய் என நிரூபிக்கப்படும்!சரத் வீரசேகர
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பொய் என நிரூபிக்கப்படும் என பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது, இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என நிரூபிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகில் எந்தவொரு நாட்டின் வெளிவிவகார அமைச்சரும்,தனது நாட்டு படையினரும், அரசாங்கமும் போர்க் குற்றச்செயல்களில் ஈடுபட்டனர் என ஒப்புக்கொண்டதில்லை எனவும், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனை ஒப்புக்கொண்டுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தொடர்பில் எட்டு விடயங்கள் உள்ளடக்கி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அப்போதைய நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியதாகவும், இது ஓர் பிழையான விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் போன்றதொரு சம்பவம் இனி நாட்டில் இடம்பெறாது எனவும் புலனாய்வுப் பிரிவினை பலவீனப்படுத்தியதனால் இந்த நிலைமை ஏற்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், தற்பொழுது பாதுகாப்பு கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதனால் அவ்வாறான ஓர் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டால் முன்கூட்டியே கண்டறிந்து அது முறியடிக்கப்படும் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து - சிக்கிய 20க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் - வெளியான காரணம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல்
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீவிரமடையும் வானிலை: பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri