ரோசி சேனாநாயக்கவுக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டு! - விசாரணைகள் ஆரம்பம்
கொழும்பு மேயரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் பொது நிதி மற்றும் நிதி ஊழல் மோசடிகள் தொடர்பில் இலஞ்சம் - ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம இலஞ்சம் - ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரோசி சேனாநாயக்கவுக்கு எதிராக கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 23ம் திகதி இலஞ்சம் - ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
முறைப்பாட்டினை ஆராய்ந்த பின்னர் விசாரணைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் கடந்த 5ம் திகதி எழுத்து மூலம் மஹிந்த கஹந்தகமவிடம் தெரிவித்திருந்தார்.
கொழும்பு மேயர் பொது நிதியை தவறாக பயன்படுத்துவதாக அவ்வப்போது ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
பராசக்திக்கு வெளிநாட்டில் குவியும் வசூல்.. எவ்வளவு தெரியுமா? அமரன் படத்தை விட அதிகம் தான் Cineulagam