பிரித்தானிய பிரதமர் வேட்பாளர் மீது அதிரடிக் குற்றச்சாட்டு
பிரித்தானிய பிரதமர் போட்டிக்கான நடைமுறைகள் சூடுப்பிடிக்கத் துவங்கியுள்ளது போலவே, பிரதமர் வேட்பாளர்களுக்கிடையிலான விவாதங்களும் சூடுபிடிக்கத்துவங்கியுள்ளன.
தான் பிரதமரானால் நாட்டுக்கு என்ன செய்வேன் என்று கூறி வாக்கு சேகரிக்கத் துவங்கிய பிரதமர் வேட்பாளர்கள், தற்போது ஒருவரை ஒருவர் நேரடியாகத் தாக்கிப் பேசத் துவங்கியுள்ளார்கள்.
அவ்வகையில், ரிஷியின் கொள்கைகள், முன்னாள் பிரித்தானிய பிரதமரும், சேன்ஸலருமான Gordon Brown என்பவருடைய கொள்கைகளைப் போல பழங்கால கொள்கைகள் என விமர்சித்திருந்தார் அவரை எதிர்த்துப் போட்டியிடும் லிஸ் ட்ரஸ்.

அதாவது, மக்களிடமிருந்து வரி வாங்கி மக்களுக்காக செலவு செய்வதுதான் ரிஷியின் கொள்கை. அது பழங்கால கொள்கை. Gordon Brown அதைத்தான் பின்பற்றினார். ஆனால், மக்கள் தங்கள் பணத்தைத் தாங்களே வைத்திருக்கத்தான் விரும்புகிறார்கள்.
ரிஷியின் வரி வாங்கி செலவு செய்யும் கொள்கையோ நம்மை பொருளாதார ரீதியில் பின்னோக்கித் தள்ளிவிடும் என்கிறார் அவர். லிஸ் ட்ரஸ் ரிஷியை Gordon Brownஉடன் ஒப்பிட்டுள்ளது ரிஷி தரப்பினரை எரிச்சலூட்டியுள்ளதால், அவர்கள் லிஸ் ட்ரஸ்ஸை ஒழுக்கம் கெட்டவர் என விமர்சித்துள்ளார்கள்.
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri