அனைத்து வீதிகளும் குறுகிய காலத்திற்குள் சீரமைக்கப்படும் - அமைச்சர் பிமல் உறுதி
நுவரெலியா மாவட்டத்தில் மண் சரிவால் பாதிக்கப்பட்ட அனைத்து வீதிகளும் குறுகிய காலத்திற்குள் சீரமைக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (11.12.2025) மதியம் கண்டி-நுவரெலியா பிரதான வீதியில் உள்ள ரம்பொட, கட்டுகிதுல, கரடிஎல்ல மற்றும் லபுக்கலை ஆகிய பகுதிகளில் மண் சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான ஆய்வு சுற்றுப்பயணத்தில் பங்கேற்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்துக்காக ஒரு பாதை
மேலும் தெரிவித்த அமைச்சர், மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை மற்றும் வலப்பனை போன்ற பகுதிகளில் பிரதான வீதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
சேதமடைந்த அனைத்து பிரதான வீதிகளும் மிக குறுகிய காலத்திற்குள் சீரமைக்கப்பட்டு, வீதி கட்டுமான அபிவிருத்தி நிறுவனத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் நுவரெலியாவின் அழகைப் பாதுகாப்பது எமது பொறுப்பு.

பிரதான போக்குவரத்துக்காக ஒரு பாதை திறக்கப்பட்டுள்ளது, இது பாதிக்கப்பட்ட நுவரெலியா மாவட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க உதவும்.
ரம்பொடையிலிருந்து நுவரெலியா செல்லும் பிரதான வீதியில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை ஜப்பானைச் சேர்ந்த புவியியலாளர்கள் குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளதோடு, அந்த அறிக்கைகள் அனைத்தையும் ஆய்வு செய்த பின்னர் அனைத்து வீதிகளும் உடனடியாக சரிசெய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




அறிவுக்கரசியால் ஜனனியின் தொழிலுக்கு ஏற்பட்ட பெரும் துயரம், எப்படி சமாளிக்க போகிறார்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
புதிய வெப் தொடரை இயக்கும் மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட்... யாரெல்லாம் நடிக்கிறாங்க பாருங்க Cineulagam