சர்வகட்சி அரசாங்கம்! ரணிலிடம் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்னர், ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நேற்று(01) கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.
ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்

இந்த கடிதத்தில், “ஏற்கனவே நியமித்துள்ள அமைச்சரவையை ரத்து செய்ய வேண்டும். ஊழலில் ஈடுபட்டவர்களை உள்ளடக்கிய வகையில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட சில நியமனங்களை ரத்து செய்ய வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தை கையாளும் போது பின்பற்றப் போகும் முறைகளை, ஜனாதிபதி வெளிப்படுத்த வேண்டும். இவை மேற்கொள்ளப்படாவிட்டால், ஜனாதிபதியுடன் நடத்தப்படும் திறந்த உரையாடல்களில் எந்தப் பயனும் இல்லை.
சம்பிக்கவின் வலியுறுத்தல்

நீங்கள் உருவாக்க உத்தேசித்துள்ள புதிய அரசாங்கம் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு கட்சியும் குழுக்களில் இணைவதன் மூலம் நாடாளுமன்றத்தில் பங்கு வகிக்க முடியும்.
ஜனாதிபதி உருவாக்க உத்தேசிக்கும் அரசாங்கம் உண்மையிலேயே அனைத்துக் கட்சி
அரசாங்கமாகவும் அனைத்து அரசியல் கட்சிகளின் சம்மதத்துடன் வேலைத்திட்டத்தை
முன்னெடுக்கும் அரசாங்கமாகவும் இருக்க வேண்டும்.
எனவே அனைத்து கட்சி ஆட்சி பற்றிய உரையாடல் தொடர்வது, தமது நிலைப்பாட்டுக்கு,
ஜனாதிபதி தரப்பில் தரப்படும் பதில்கள் பொறுத்தது” என்று ரணவக்க தெரிவித்துள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்தார் பாருங்க.. புகைப்படம் இதோ Cineulagam