அனைத்து மலையக கட்சிகளிடமும் வேலு குமார் விடுத்துள்ள கோரிக்கை

Sri Lanka Upcountry People Sri Lanka M. Velu Kumar Economy of Sri Lanka
By Siva Thileep May 25, 2022 07:10 AM GMT
Report

அனைத்து மலையக கட்சிகளும் ஒன்றிணைந்து, மலையக மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் உதவிகள் பாரபட்சமின்றி கிடைப்பதற்குரிய முறைமை ஒன்றை முன்வைக்க வேண்டும் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் கோரிக்கை விடுத்துள்ளார். 

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவக்கையில்,

நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை பஞ்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மட்டத்திலும் உள்ள மக்கள் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

அனைத்து மலையக கட்சிகளிடமும் வேலு குமார் விடுத்துள்ள கோரிக்கை | All Hill Parties Should Come Up With System Kumar

குறிப்பாக குறை வருமானம் பெறுபவர்கள் தமது உணவு தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் அரசாங்கம் விசேட நிவாரணங்களை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது. கடந்த காலங்களில் இத்தகைய நிவாரணங்களை வழங்கும் போது, மலையக மக்களுக்கு பாரபட்சம் காட்டப்பட்டது.

இந்நிலைமையை தவிர்த்துக் கொள்வதற்கு அனைத்து மலையக கட்சிகளும் ஒன்றிணைந்து, மலையக மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் உதவிகள் பாரபட்சமின்றி கிடைப்பதற்குரிய முறைமை ஒன்றை முன்வைக்க வேண்டும்.

அனைத்து மலையக கட்சிகளிடமும் வேலு குமார் விடுத்துள்ள கோரிக்கை | All Hill Parties Should Come Up With System Kumar

இந்திய அரசிடம் இருந்தும், குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்தும், இரண்டு பில்லியன் பெறுமதியான நிவாரண பொருட்கள் கிடைக்க பெற்றிருக்கின்றது.

எமது நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைக்கு உதவும் விதமாக தமிழ் நாட்டு அரசே முன்வந்து இந்நிவாரண பொருட்களை பெற்றுத்தந்துள்ளது.

இதனை வைத்து, குறுகிய அரசியல் வட்டத்திற்குள் வாதவிவாதம் செய்து கொள்வது இந்நேரத்தில் பொருத்தமானது அல்ல. மக்களுக்கு தெளிவாக தெரியும் நிவாரண பொருட்கள் எவ்வாறு கிடைக்கப் பெற்றது என்பது.

அனைத்து மலையக கட்சிகளிடமும் வேலு குமார் விடுத்துள்ள கோரிக்கை | All Hill Parties Should Come Up With System Kumar

மக்கள் எதிர்நோக்கியுள்ள பாரிய பிரச்சினைகளுக்கு மத்தியில் சிறுபிள்ளைத்தனமான அரசியல் செயற்பாடுகள் மக்களுக்கு மேலும் கோபத்தை தூண்டுவதாகவே உள்ளது.

சூழ்நிலையை புரிந்து கொண்டு மக்களுக்கான நிவாரணங்கள் பாரபட்சமின்றி கிடைப்பதற்குரிய வழிமுறையை ஏற்படுத்துவதே எமது கடப்பாடாகும். அதற்கான கலந்துரையாடலை மற்றும் செயற்பாடுகளை அரச தரப்போடு நாம் பேசி துரிதமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது.

கடந்த காலத்தில் கோவிட் 19 நிவாரணம் வழங்கலில் மலையகம் எங்கும் பாராபட்சம் காட்டப்பட்டது. ரூபா 5000 கொடுப்பனவில் பாரிய சிக்கல்கள் எழுந்தது. சில பிரதேசங்களில் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் ஓரம்கட்டப்பட்டனர்.

அனைத்து மலையக கட்சிகளிடமும் வேலு குமார் விடுத்துள்ள கோரிக்கை | All Hill Parties Should Come Up With System Kumar

அத்தோடு ஒரு வீட்டில் அல்லது ஒரு லயன் அறையில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்கள் ஒரு அலகிற்குள் இருந்தாலும், தனிப்பட்ட குடும்பங்களாகவே தமது தேவைகளை நிறைவு செய்து கொள்கின்றனர். அவ்வாறான துணை குடும்பங்கள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டது.

இன்று உயிர் வாழ்வதற்கு மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இச்சூழலில் பாரபட்சமின்றி நிவாரணங்கள் கிடைக்கப்பெற்ற வேண்டும். அதற்கு தகுந்த வழிமுறை உருவாக்கப்பட வேண்டும்.

சமூகத்தில் பல்வேறு தரப்பினர்களையும் ஒன்றிணைத்து, இச் செயற்பாட்டை மேற்கொள்வது பொருத்தமாக அமையும். அதனை நாங்கள் உடனடியாக செய்ய வேண்டி உள்ளது.

அதற்கு மாறாக, கட்சி சார்ந்த அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொள்ள முயற்சித்தால் மக்களின் கோபம் எத்தகைய பாரதூரமான விளைவை ஏற்படுத்தும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US