நாட்டின் நெருக்கடி நிலைமைக்கான காரணத்தை வெளியிட்டுள்ள மைத்திரி
தமது ஆட்சி காலத்தில் சகல நாடுகளும் உதவியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நட்பு ரீதியான வெளியுறவுக் கொள்கைகளை பின்பற்றாமையே இந்த நெருக்கடி நிலைமைக்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலன்னறுவையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை
கடந்த மூன்றாண்டு காலமாகவே எடுக்கப்படும் தீர்மானங்கள் மக்கள் மத்தியிலும் அரசாங்கத்திற்கு உள்ளேயும் கேள்விகள் எழுப்பப்படுவதாக தெரிவித்துள்ளார்.
நாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் வாழ்க்கைச் செலவு, பொருட்களின் விலைகள், மருந்துப் பொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணிகள் தொடர்பில் அரசாங்கம் மீது குற்றம் சுமத்துகின்றோம்.

எனினும் அரசாங்கமும் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ளது. நான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அனைத்து நாடுகளும் பேதமின்றி உதவின.
ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா, சீனா மற்றும் ஏனைய உலக நாடுகளும் உதவின. அனைத்து நாடுகளுடனும் நட்புறவு பேணப்பட்டது. எனினும் கடந்த மூன்றாண்டுகளில் என்ன நேர்ந்த்து என்பதனை மக்கள் அறிவார்கள் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.