225 பேரும் ஒன்றிணைவதற்கான முதுகெலும்பு இருக்க வேண்டும்:ஹரின் பெர்னாண்டோ
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அக்கிராசன உரை தொடர்பில் வாயால் சிறந்த உரை எனக்கூறினாலும் நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக இணையவதற்கான முதுகெலும்பு இருக்க வேண்டும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று ஜனாதிபதியின் அக்கிராசன உரை தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஹரின் பெர்னாண்டோ இதனை கூறியுள்ளார்.
அதிகளவான பாராட்டுக்களை பெற்ற ஜனாதிபதியின் அக்கிராசன உரை
நாட்டின் நாடாளுமன்றத்தின் வரலாற்றில் ஜனாதிபதி ஒருவரின் அக்கிராசன உரைக்கு கட்சி, வர்ண பேதங்கள் இன்றி அதிகமான பாராட்டுக்கள் கிடைத்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இது நோக்கு ஒன்று இருக்கும் நபர் ஆற்றிய உரையாக நான் பார்க்கின்றேன். கோட்டாபய ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதி. நாட்டில் இருக்கும் பிரச்சினை என்ன என்பதை அடையாளம் காண்பதே ரணில் விக்ரமசிங்கவுக்கு இருந்த பிரச்சினை.
இரண்டாவது நெருக்கடிக்கான தற்காலிக தீர்வு. அதேபோல் நெருக்கடிக்கு நீண்டகால தீர்வும் அவசியம். போராட்டம் உண்மையில் எப்போது ஆரம்பமானது.
225 பேரும் இணையவில்லை என்றால் நாட்டை மீட்டெடுப்பது பிரச்சினையாக இருக்கும்
போராட்டம் 2019 ஆம் ஆண்டு ஆரம்பமானது. பல பிரச்சினைகள் இருக்கும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியின் உரை சிறந்தது என்று கூறினாலும் 225 பேரும் ஒன்றாக இணைய முதுகெலும்பு இருக்க வேண்டும்.
இந்த சந்தர்ப்பத்தில் 225 பேருக்கு ஒன்றாக இணைய முடியவில்லை என்றால், நாட்டை மீட்டெடுப்பது பெரிய பிரச்சினையாக இருக்கும்.
பிரச்சினைகளின் பின்னணியிலேயே ஏப்ரல் 9 ஆம் திகதி போராட்டம் ஆரம்பமாகியது. இந்த பிரச்சினைக்கு எமக்கு ஒரு தீர்வே உள்ளது. நாட்டு மக்களை ஒன்றிணைக்க வேண்டும்.
மக்களை ஒன்றிணைக்கக்கூடிய இடம் ஒன்று இருக்க வேண்டும். அந்த இடமே நாடாளுமன்றம். எனினும் நாடாளுமன்றத்தில் நாம் இன்னும் குறுகிய அரசியல் நோக்கங்களுடன் இருக்கின்றோம் என ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.