மீண்டும் நீதியமைச்சரானார் அலி சப்ரி
வெளிவிவகார அமைச்சர் எம்.யூ.எம். அலி சப்ரி மீண்டும் நீதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்காக அண்மையில் பதவி விலகிய விஜயதாச ராஜபக்ச வகித்த நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
அதி விசேட வர்த்தமானி
இதற்கு முன்னதாக குறித்த அமைச்சு ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், அமைச்சர் அலி சப்ரி தற்போது வகிக்கும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுப் பதவிக்கு மேலதிகமாக இந்த அமைச்சுப் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, கடந்த கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தில் அலி சப்ரி நீதி அமைச்சராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
