அனுரகுமாரவுடன் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவுடன் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த சந்திப்பானது டெல்லியில் உள்ள சர்தார் படேல் பவனில் நேற்று (05.02.2024) பிற்பகல் இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நட்புரீதியான கலந்துரையாடல்
இக்கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் விஜித ஹேரத் உடனிருந்துள்ளார்.

இந்த சந்திப்பில், பிராந்திய பாதுகாப்பு, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து நீண்ட மற்றும் நட்புரீதியான மற்றும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய மத்திய அரசின் உத்தியோகபூர்வ அழைப்பின் பிரகாரம், தேசிய மக்கள் சக்தியின் தூதுக்குழு நேற்று (05) காலை டெல்லி சென்றுள்ளது.

இந்த தூதுக்குழுவில் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்க, தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் அதன் செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோர் இணைந்து கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam