வெளிநாடு செல்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! விமான பயணச்சீட்டு தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
நாட்டில் அனுமதிப்பத்திரமின்றி விமான பயணச்சீட்டுகளை விற்பனை செய்யும் பல்வேறு குழுக்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே இது குறித்து அவதானமாக செயற்படுமாறு இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை பொது மக்களிடம் கோரியுள்ளது.
சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையினால் வழங்கப்படுகின்ற அனுமதிப்பத்திரமின்றி விமான பயண டிக்கெட்டுகளை விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றம் எனவும் சிவில் விமான அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
பொது மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
மேலும், அனுமதிப்பத்திரமின்றி விமான பயணச்சீட்டுகளை விற்பனை செய்யும் முகவர் நிலையங்களிடமிருந்து விமான பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு செயற்படும் சட்டவிரோத முகவர் நிலையங்கள் தொடர்பில் அறிவிக்குமாறும் அதிகார சபை பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறான நிறுவனங்கள் தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் அறிவிக்க முடியும் எனவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.