நான்கு மணிநேர விசாரணை.. அடுத்து சிக்கப் போகும் மிக முக்கிய புள்ளி
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கான எயார்பஸ் விமானக் கொள்வனவு மற்றும் ஒப்பந்த ஊழல் தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்து வருகின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இவ்வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டு தற்போது பிணையும் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்கையில், இவ்வழக்கு தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சின் செயலாளர் பி.பி. ஜெயசுந்தரவிடம் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில், சுமார் நான்கு மணிநேரத்திற்கு இவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், விரையில் ஒரு முக்கிய அரசியல் பிபரபலம் விசாரணைக்கு அழைக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,