பருவ மழை இன்மையால் விவசாயம் பாதிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளில் பெரும்போக பயிர்ச் செய்கையில் இடுபட்டுவரும் விவசாயிகள் பருவ மழை இன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் நீர் இல்லாது பதிப்படையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தற்பொழுது நெற்கதிர்கள் உருவாகும் நிலையில் பயிருக்கு தேவையான நீர் இல்லாத காரணத்தினால் வயல் நிலங்கள் வறட்சியடைந்து வருகின்றது. இதனால் வளர்ச்சியும் குன்றியே காணப்படுகின்றது.
மானாவாரி பயிர்ச்செய்கை


இந்த நிலையில் சில விவசாயிகள் தம்மால் இயன்றவரை குளங்களுக்கு அருகே உள்ள வயல்களுக்கு பம்பிகள் மூலம் நீர் பாய்ச்சி வருகின்றனர்.
அத்துடன் சிலர் இரவு பகல் பாராமல் தொடர்ச்சியாக 5 நாட்கள் 6 நாட்களாக வயல்களிலே தங்கி நின்று நீர் பாச்சும் நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக மழையை மாத்திரம் நம்பியுள்ள மானாவாரி பயிர்ச்செய்கையே இவ்வாறு
பாதிக்கப்பட்டுள்ளது. மழையின்மை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக
விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam