அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடரில் பாதிக்கப்பட்ட விவசாய செய்கைகள் அனைத்துக்கும் நஷ்ட ஈடுகள் வழங்கப்படும் என கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபைத் தலைவர் ஜயசிங்க ஆராச்சி தெரிவித்துள்ளார்.
'டித்வா'சூறாவளியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீள கட்டியெழுப்புவது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர்,
கமநல மத்திய நிலையங்கங்கள்
வெள்ளப் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. வெள்ளத்தில் மூழ்கியுள்ள விவசாய நிலங்களில் உள்ள வெள்ள நீர் வடிந்தோடிய பின்னர், கமநல மத்திய நிலையங்களில் போடப்பட்டிருக்கும் பாதிப்பை அறிவிக்கும் புத்தகத்தில் உங்கள் பாதிப்பை பதிவு செய்து கொள்ளவும்.
அவசரப்படாமல் நீர் வடிந்த பின்னர் பாதிக்கப்பட்ட ஏக்கரை கணக்கெடுப்பு செய்து கமநல மத்திய நிலையத்திற்கு அறிவிக்கவும். அதற்காக நாம் முன்னர் இரண்டு கிழமைகளே கொடுத்திருந்தோம்.
அது ஒரு மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது. நாங்கள் உங்கள் விவசாய நிலங்களுக்கு சென்று அதை பார்வையிட்ட பின்னர், உங்களுக்கான நஷ்ட ஈட்டை வங்கி கணக்குகளுக்கு உடனடியாக வைப்பிலிட நடவடிக்கை எடுப்போம் என்றார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் அழகே அழகு தொடர்... புத்தம் புதிய சீரியல், யார் யார் நடிக்கிறார்கள் பாருங்க Cineulagam